டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் துவக்க விழா.. மலைக்க வைக்கும் செலவு.. ஆர்டிஐ-யில் அம்பலம்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்த டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் வந்தே பாரத் விரைவு ரயிலின் துவக்க விழாவிற்காக, ரூ.52 லட்சத்து 18 ஆயிரத்து 400 செலவிடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18 என்ற விரைவு ரயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டது. இந்த ரயிலானது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையான வசதிகளை கொண்டவாறு தயாரிக்கப்பட்டது.

 Rs.52.18 lakh spent for Vande Bharat express train inaugural function.. RTI shocking information

இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 1,128 பயணிகள் பயணம் செய்ய முடியும். இது அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடையது. டெல்லி - வாரணாசி இடையே இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த அதிவிரைவு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார், புல்வாமாவில் மத்திய படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்இ 40 பேர் வீரமரணம் அடைந்தனர், அதற்கு மறுநாள் காலை திட்டமிட்டப்படி வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி விழா பிரதமர் தலைமையில் நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,

நாளைக்கு தேர்தல் ரிசல்ட்.. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.. வாக்கு மையங்களில் பரபரப்பு நாளைக்கு தேர்தல் ரிசல்ட்.. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.. வாக்கு மையங்களில் பரபரப்பு

இந்நிலையில் டெல்லி - வாரணாசி இடையே பயணத்தை துவக்கிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தின் போதே தெழில்நுட்ப கோளாறால் ரிப்பேராகி பாதி வழியில் நின்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி - வாரணாசி இடையிலான தொலைவை சுமார் 10 மணி நேரத்திற்குள் இந்த ரயில் கடந்து வருகிறது. தற்போது பிரச்னைகளின்றி இயங்கி வரும் இந்த வந்தே பாரத் விரைவு ரயிலின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு ரூ. 52 லட்சத்து 18 ஆயிரத்தி 400 செலவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

துவக்க விழாவிற்கான கூடாரம் அமைப்பதற்கும், வாட்டர் ப்ரூஃப் பந்தல்கள் அமைக்கவும், தொலை தொடர்புகளுக்காக சிக்னல்களை பெறுவதற்காகவும் மின்சாரத்திற்காகவும் ரயில்வே துறை ரூ,52 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இத்தகவல் சாமானிய மக்களை அத்ர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
The shocking exchanges of Rs 52 lakhs and 18 thousand 400 have been exposed for the opening of the Vande Bharat Express, which runs between Delhi-Varanasi, which was launched by Prime Minister Modi last February.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X