சீனா, சிங்கப்பூர் உட்பட 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்!
டெல்லி: சீனா, சிங்கப்பூர் உட்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் சுற்றுலா பயணங்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் உலக நாடுகளில் அதிகரிக்க
தொடங்கி இருப்பதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடுகிறது. சீனாவில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.

சீனாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, தைவான் என பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றன.
நமது இந்தியாவிலும் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை இன்று முதல் அமல்படுத்துகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள சீனா, ஹாங்ஹாங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள், தங்களது பயணத்துக்கு 72 மணிநேரத்துக்கு முன்னதாக பெறப்பட்ட சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் தமக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்கிற உறுதிமொழியையும் அவர்கள் வழங்க வேண்டும். இந்த நடைமுறை அனைத்து விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்கிற இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், புறப்படுவதற்கு முன் கட்டாயமாக ஆர்டிபிசிஆர் சோதனைகளைச் செய்து, ஜனவரி 1, 2023 முதல் ஏர் சுவிதா போர்ட்டலில் அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும். 2023. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் 2 சதவீத சீரற்ற சோதனைகளுக்கு கூடுதலாக இந்தச் சோதனை மேற்கொள்வது அவசியமாகிறது. உலகம் முழுவதும் குறிப்பாக மேற்கூறிய நாடுகளில் நிலவும் கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications