சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.. இது ஜிஹாதிகளின் கொடூர செயல்.. கொதித்தெழுந்த நடிகை கங்கனா ரணாவத்
டெல்லி: அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மேடையில் கத்தியால் கொடூரமாக குத்திய சம்பவத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர், ‛‛இது ஜிஹாதிகளின் மற்றொரு கொடூரமான செயல்'' என விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். பிரபல எழுத்தாளரான இவர் புதினங்கள் எழுதி வருகிறார். ‛‛மிட்நைட்ஸ் சில்ட்ரன்'' எனும் புதினத்துக்கு புக்கர் பரிசு பெற்றார்.
இதையடுத்து அவர் Satanic Verses எனும் நூல் எழுதினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேடையில் கத்திக்குத்து
இதையடுத்து சல்மான் ருஷ்டிக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. பல நாடுகளில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவரை கொலை செய்வருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. தீவிரவாதிகளும் அவருக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் அவர் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். மேலும் உரிய பாதுகாப்புடன் பதுங்கியே வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென்று மேடை ஏறிய மர்மநபர் சல்மான் ருஷ்டியை 10 முதல் 15 முறை கத்தியால் குத்தினார். அதாவது சல்மான் ருஷ்டியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

வெண்டிலேட்டர் சிகிச்சை
இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். கத்திக்குத்து காயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஒரு கண்ணின் பார்வை குறைபாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கங்கனா ரணாவத் கண்டனம்
சல்மான் ருஷ்டியின் மீதான தாக்குலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் சல்மான் ருஷ்டி மீதான கொலைவெறி கத்திக்குத்து சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகை கங்கனா ரனாவத் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இன்ஸ்டாவில் கூறியது என்ன?
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டகிராம் பதிவில், "இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல் நடந்துள்ளது. Satanic Verses மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று. தாக்குதல் சம்பவங்கள் குறித்து அறிந்து நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்" என கூறியள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications