சனாதனம்: உதயநிதி ஸ்டாலின் மீது உ.பி. போலீஸ் வழக்கு! மல்லிகார்ஜூன கார்கே மகனும் சேர்ப்பு!
டெல்லி: மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (திமுக), கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே (காங்கிரஸ்) ஆகியோர் மீது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சனாதன தர்மம், மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகிறது; இந்த சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்கவே வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சை, சனாதனிகளை இனப்படுகொலை செய்ய தூண்டியதாக பொய் பிரசாரம் செய்தது பாஜக.

மேலும் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு தருவேன் என உ.பி. சாமியார் ஒருவர் கொக்கரித்தார். அவரது கொலை வெறி அழைப்புக்கும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகனும் கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கே, மனிதர்களுக்கிடையே பாகுபாடை உருவாக்கி மனிதனுக்கு உரித்தான கண்ணியத்தை மறுக்கக் கூடிய மதம் ஒரு தொற்று நோய்தான் என ஆணித்தரமாக கூறியிருந்தார். அவரது பேச்சுக்கும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நாட்டின் பல பகுதிகளில் காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் புகார் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது உ.பி. ராம்பூரில் உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருவரும் கருத்துகளை தெரிவித்ததாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications