சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வது நாள் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2021-22-ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த உத்தரவை வரவேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும் , சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப் பெரிய வெற்றி என்று கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றம்
அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தொடர்பான விசாரணையின்போது, தமிழ்நாட்டில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில் 50% இடஒதுகீடு வழக்கின் இறுதி விசாரணை செவ்வாய்கிழமையில் தொடர்ந்து நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில் 50% இடஒதுகீட்டை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020 முதலாக இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரணையில் இருந்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை ஒதுக்குவது தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடரலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்குமாறு தமிழ்நாடு அரசுக்கும் மனுதாரருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் குமார் கூறுகையில், "2022-2023 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து ஏதேனும் விளக்கம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என்பது மாநில அரசு மற்றும் மனுதாரர்களின் விருப்பம் என்று கூறினார்.

10 நாட்களுக்குள் விளக்கம்
10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற மனுதாரர்களுக்கும் அரசுக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், 25-11-2022 முதல் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்படுவதற்கான அட்டவணையின்படி மத்திய அதிகாரிகள் கவுன்சிலிங்கைத் தொடர விரும்பினால், அவர்கள் அதையே தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மருத்துவ படிப்பு கவுன்சிலிங்
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு, அந்த அரசாணையை குறிப்பிடாமல், தமிழ்நாட்டில் 100% சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கான பொது கவுன்சிலிங்கிற்கான ஆணையை வெளியிட்டது. ஆனால், இறுதியில், உச்ச நீதிமன்றம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதாவது முழு 100% இடங்களுக்கான கவுன்சிலிங் 2020-2021 கல்வியாண்டுக்கு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசுக்கு தடையில்லை
ஆனால், அடுத்த கல்வியாண்டில் அதாவது 2021-2022க்கு, 2-11-2020 தேதியிட்ட உத்தரவின் மூலம் 2020-2021 கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பை தொடர தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இடஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டு 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான கவுன்சிலிங்கைத் தொடர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இருக்கவில்லை.

மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கலாம். ஒரு மாணவர்களுக்கு ரு.2 கோடி செலவு செய்யப்படுகிறது. இதில் பிற மாநிலங்கள் மாணவர்கள் வரும்போது அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்யப்படுகிறது. இதனால் தமிழக அரசிற்கு அதிக அளவில் செலவு ஏற்படுகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்த வரை அரசுக்காக உழைக்கக்கூடிய மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக உள்ளது.

15 நாட்களில் மாணவர் சேர்க்கை
உச்சநீதிமன்றம் ஏற்கனவே கொடுத்த இடைக்கால உத்தரவின் படி இந்தாண்டும் மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வாறு ஒரு மாநிலம் வந்து விட்டால் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் இதுபோன்று வந்துவிடுவார்கள் என்றும் 15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வது நாள் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் இறுதி விசாரணை என்பது வரும் செவ்வாய்கிழமையில் தொடர்ந்து நடைபெறும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications