நாட்டில் முதன்முறையாக.. உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக நாகரத்னா தேர்வு செய்ய வாய்ப்பு!
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒன்பது பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. இதில் மூன்று பெண் நீதிபதிகள் அடங்குவார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏஎம்கான்வில்கர், டிஒய் சுந்திரசூட், எல் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் இந்த 9 நீதிபதிகள் அடங்கிய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

பெண் தலைமை நீதிபதி
கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இதற்கு விடை கிடைக்கும் வகையில் கொலிஜியம் பரிந்துரை அமைந்துள்ளது. கொலிஜியம் பரிந்துரை செய்த 3 பெண் நீதிபதிகளில் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்னாவும் ஒருவர். இந்த பரிந்துரை வரிசையின்படி பெண் நீதிபதி நாகரத்னா 2027-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

நேரடியாக தேர்வு
அப்படி 2027-ம் ஆண்டு நாகரத்னா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றால் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற மிகப்பெருமையை நாகரத்னா பெறுவார். இதேபோல் இந்த 9 பேரில் நீதிபதிகள் அல்லாத ஒருவர் மூத்த வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிஎஸ் நரசிம்மா உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நீதிபதிகள் எண்ணிக்கை?
உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 26 பேரே இருந்து வந்தனர். ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்எஃப் நாரிமன் ஓய்வு பெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆகக் குறைந்துள்ளது. கொலிஜியம் அனுப்பிய நீதிபதிகள் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயரும். அடுத்தவாரம் புதன்கிழமை நீதிபதி நவின் சின்ஹா ஓய்வு பெற்றால், கூடுதலாக இடம் காலியாகும் என்பது குறிப்பிடதக்கது.

நீதிபதிகள் விவரம்
கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த நீதிபதிகள் விவரம் பின்வருமாறு:-
1. நீதிபதி பி.வி. நாகரத்னா - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.(இவர்தான் 2027-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வர வாய்ப்புள்ளது)
2. நீதிபதி ஹிமா கோலி - தெலுங்கானாவின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்
3. நீதிபதி பெலா திரிவேதி - குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்
4. மூத்த வழக்கறிஞர் பி.எஸ் நரசிம்மா - வழக்கறிஞராக இருந்து நேரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.

சென்னை நீதிபதி சுந்தரேஷ்
5. நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா- கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்
6. நீதிபதி விக்ரம் நாத் - குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்
7. நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி - சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்
8. நீதிபதி சி.டி.ரவிக்குமார் - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
9. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications