சரவெடிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை.. கொண்டாட்டம் என்ற பெயரில் தீங்கு விளைவிப்பதா?.. சரமாரி கேள்வி
டெல்லி: நாடு முழுவதும் வருகிற 4-ம் தேதி தீபவாளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபவாளி என்றாலே அனைவருக்கும் பட்டாசுதான் நியாபத்துக்கு வரும். பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது மக்களின் வழக்கம்.
ஆனால் வேதி பொருட்களை கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் மக்களின் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது என்று ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

தடை விதிக்க வேண்டும்
இந்த நிலையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு மற்றும் தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்தது.

உச்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கு உச்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இதனை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவில் கூறி இருப்பதாவது:- சரவெடியை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. வேதிபொருட்களை கொண்டு பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்.

உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கும்
அதே வேளையில் தடைசெய்யப்பட்ட பேரியம், பேரியம் நைட்ரேட், பாதரசம் உள்ளிட்ட உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கும் . வேதிப்பொருட்களை கொண்டு பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தான் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசு உற்பத்தி செய்வோர் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்

போலீசார்தான் பொறுப்பு
போலியாக பசுமை பட்டாசு தயாரித்தால், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டாலும், விற்கப்பட்டாலும் அல்லது வெடிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட காவல் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள்.

நல்வாழ்வு என்பது அடிப்படை உரிமை
நல்வாழ்வு என்பது அடிப்படை உரிமை, எனவே கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்து அதனாலான மாசுவால் ஒருவரின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. எந்த விதி மீறல் கண்டறியப்பட்டாலும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்தமுறை நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் விதி மீறல் நடந்துள்ளது என்பது விசாரணை அறிக்கை வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இம்முறை அவ்வாறான எந்த விதி மீறலும் நடக்ககூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.

ஊடகங்கள் வாயிலாக பிரசூரிக்க வேண்டும்
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை மாநில அரசு, காவல்துறை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மக்கள் அறிந்துகொள்ள ஊடகங்கள் வாயிலாக பிரசூரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications