விதிகளை மீறி கட்டிய 40 மாடி இரட்டை கோபுர கட்டிடம்.. 3 மாதத்தில் இடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 40 மாடி இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வீடு வாங்கியவர்களுக்கு 12% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கட்டிட இடிப்பு செலவை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏற்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த நொய்டா அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இரட்டை கோபுரம்
டெல்லி அருகே நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் கட்டியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு 550 குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக கூறிய சூப்பர்டெக் நிறுவனம், விதிகளை மீறி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுக்குமாடி எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி 900-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட 40 மாடி கட்டிடம் ஆக்கிவிட்டது என்று இந்த கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் 2014-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அப்போது விதிகளை மீறிய இரட்டை கோபுர கட்டிடங்களை 4 மாதங்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும். வீடுகளை வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் எம் ஆர் ஷா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

3 மாதத்தில் இடிக்கணும்
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ' 40 மாடி இரட்டை கோபுரத்தை 3 மாதத்திற்குள் இடிக்க வேண்டும்.கோபுரத்தை இடிக்கும் செலவை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்க வேண்டும்.இரட்டைக் கோபுர குடியிருப்பு உரிமையாளர்களுக்கு 12% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டனர். அதிகாரிகளுக்கும் டெவலப்பர்களுக்கும் இடையே மீண்டும் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது . நொய்டா அதிகாரிகளின் உடந்தை, கட்டிடத் திட்டங்களை மீறுதல், கட்டிடத் திட்டங்களை குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் மறுப்பது, கட்டிட விதிமுறைகளை மீறுதல் போன்றவை இதில் அரங்கேறி உள்ளன என்று நீதிபதிகள் குற்றம்சாட்டினார்கள்.

பாதுகாப்பு தரம் எங்கே?
இந்த கட்டுமானம் பாதுகாப்பு தரங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. சட்டவிரோதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை கோபுரங்களுக்கு இடையே போதிய இடைவெளி இன்றியும் தேசிய கட்டுமான விதிகளுக்கு விரோதமாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோபுரங்களைக் கட்டுவதற்காக தோட்டப் பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கூறினார். மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த நொய்டா அரசு அதிகாரிகளை நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதிகாரிகளுக்கு கண்டனம்
''நீங்கள்(அதிகாரிகள்) உங்கள் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஊழல் செய்கிறீர்கள். இது ஒரு அதிர்ச்சியூட்டும் அதிகார உடந்தை. வீடு வாங்குபவர்கள் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை பற்றி கேட்டபோது, கட்டுமான நிறுவனம் அவர்களுக்கு ஆவணத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறவில்லை.ஒரு கட்டிடம் கட்டும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்'' என்று நீதிபதிகள் கூறினார்கள்.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications