டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தள்ளுபடி.. அக்ஷய் குமாருக்கு தூக்கு உறுதி.. உச்சநீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    தூக்கு கயிறு கேட்ட சிறை நிர்வாகம்... நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு ?

    டெல்லி: நிர்பயா வழக்கில் அக்ஷய் குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது

    நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து அக்ஷய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷன், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அப்போது அக்ஷய்குமார் சிங் தரப்பில் ஏ பி சிங் ஆஜரானார்.

    சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி.. 6 மாத சிசுவை வீட்டிலேயே புதைத்த பயங்கரம்.. அலறும் தூத்துக்குடி! சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி.. 6 மாத சிசுவை வீட்டிலேயே புதைத்த பயங்கரம்.. அலறும் தூத்துக்குடி!

    குற்றவாளிகள்

    குற்றவாளிகள்

    சிங் தனது வாதத்தில், அக்ஷய் குமார் ஒரு அப்பாவி, ஏழை. அவர் வேண்டுமென்றே குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டவை. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதால் குற்றவாளிகள்தான் இறப்பரே தவிர குற்றங்கள் ஒழிவதில்லை என சூடான விவாதத்தை முன்னெடுத்தார்.

    மனு தள்ளுபடி

    மனு தள்ளுபடி

    வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றனர். அதன்படி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை கைதி அக்ஷய்குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

    அக்ஷய்குமாருக்கு தூக்கு உறுதி

    அக்ஷய்குமாருக்கு தூக்கு உறுதி

    இதன் மூலம் அக்ஷய்குமாருக்கான தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த ஆண்டே மற்ற 3 பேரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது அக்ஷய் குமாரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் அக்ஷய்குமாருக்கு தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது.

    சீராய்வு மனு

    சீராய்வு மனு

    நீதிபதிகள் கூறுகையில் கொடுத்த தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றனர். சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தனது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அக்ஷய்குமார் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

    English summary
    Supreme Court rejects the review petition of Akshay kumar, Nirbhaya rape convict and it also upholds death sentence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X