டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் பலனளிக்குமா? எய்ம்ஸ் மருத்துமனை ஆய்வு

Google Oneindia Tamil News

டெல்லி: ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம், மிதமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு மருந்துகளுடன், காயத்ரி மந்திரம், மதப்பாடல், மூச்சு பயிற்சி (யோகாசனம்) ஆகியவற்றை செய்ய வைத்து விளைவை மதிப்பீடு செய்ய உள்ளது. மருந்துகளுடன் அளிக்கப்பட உள்ள இந்த துணை சிகிச்சை சோதனையில் நல்ல பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான (டிஎஸ்டி) நிதியுதவி அளித்துள்ளது, இதன்படி கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகளுடன், காயத்ரி மந்திரம், மதப் பாடல், மற்றும் யோகாசனம் ஆகியவற்றை செய்ய வைத்து, எவ்வளவு விரைவாக அவர் கொரோனாவில் இருந்து மீள்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலி முறையாக பதிவு செய்து அதிகாரப்பூர்வமாக மருத்துவ சோதனை நடத்தப்பட உள்ளது. மிதமான அறிகுறிகளுடன்" உள்ள 20 COVID-19 நோயாளிகளை தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

ஒன்று நிலையான மருத்துகளுடன் சிகிச்சையைப் பெறுபவர்கள். மற்றொன்று, நிலையான மருந்துகள் சிகிச்சையுடன், முறையாக யோகா பயிற்றுவிப்பாளரின் மேற்பார்வையில் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் உச்சரித்தல் மற்றும் யோகாசனத்துடன் சுவாச பயிற்சிகள் மேற்கொள்தல் போன்றவற்றை மேற்கொள்வார்கள். கூடுதல் சிகிச்சையைப் பெற்றவர்களுக்கு எந்த மாதிரியான நோய் பாதிப்பை எதிர்கொண்டார்கள் என்பதை மருத்துவக்குழு ஒப்பிடப்படும்.

எப்படிப்பட்ட சோதனை

எப்படிப்பட்ட சோதனை

நமது உடலில் கொரோனாவிற்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு அமைப்புகள் கடுமையான செயல்திறன் புரிகின்றன. இதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு சுவாச பிரச்சனை உடலில் பல்வேறு பாதிபுகள் ஏற்பட காரணமாகிறது. அபாயகரமானதாக உள்ள கொரோனாவிற்கு பல பரிசோதனை சிகிச்சைகள் இருந்தாலும், சுகாதார விளைவுகளை மேம்படுத்தும் என்று இன்னும் எந்த மருந்தும் நிரூபிக்கவில்லை. இந்த சூழலில் மருந்துகளுடன் காயத்ரி மந்திரம், யோகாசானம் மூலம் மூச்சு பயிற்சி, மத நம்பிக்கை பாடல்கள் ஆகியவற்றின் மூலம் சோதனைகளை எய்ம்ஸ் துவங்க உள்ளது.

எப்படி ஆய்வு

எப்படி ஆய்வு

எய்ம்ஸில் நுரையீரல் நிபுணரும் இணை பேராசிரியருமான டாக்டர் ருச்சி துவா பிரபல ஆங்கில நாளிதழிடம் இதுபற்றி பேசுகையில், சமீபத்தில் நாங்கள் தொடங்கிய ஆய்வு கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் நிலை பற்றி சோதிக்காது. மாறாக நோயாளிகளுக்கு நெகட்டிவ் சோதனை எடுக்கப்பட்ட கால அளவு மற்றும் அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளதா என்பதை இந்த ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்வோம்.

3 மாதங்கள்

3 மாதங்கள்

அவர்களின் சோர்வு மற்றும் கவலைக் கோளாறு ஆகியவற்றைக் குறைத்துள்ளதா என்று மதிப்பீடு செய்யப்படும். இந்த ஆய்வுக்கான ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த ஆய்வி யோகா குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒரு போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சியாளரும் ஈடுபட்டுள்ளார். சி-ரியாக்டிவ் புரதத்தின் அளவுகளை ஆய்வு செய்ய போகிறோம். அடுத்த இரண்டு-மூன்று மாதங்களில் சுகாதார விளைவுகளை அளவிட போகிறோம்" என்றார்.

English summary
The Department of Science and Technology (DST) has funded a clinical trial at the All India Institute of Medical Sciences (AIIMS), Rishikesh, to determine if the chanting of the Gayatri Mantra, a religious hymn, and performing the Yoga practice of Pranayama, can aid the quality of recovery as well as cure COVID-19 quicker in a subset of patients.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X