ஐஐடி, ஐஐஎம்களில் காலியாக உள்ள 10,000 பேராசிரியர் பணியிடங்கள் மோடி அரசின் பரிசு: விளாசும் ப.சிதம்பரம்
டெல்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதை , மோடி அரசின் மற்றொரு ஆண்டு இறுதி பரிசு என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்து வருகிறார். பொருளாதார ரீதியாகவும் சிந்ததாந்த ரீதியாகவும் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை விகிதம், மற்றும் வாராக்கடன் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த ப. சிதம்பரம் நரேந்திரமோடி அரசின் ஆண்டு இறுதி பரிசுகளை என்ஜாய் செய்யுங்கள் என கிண்டலடித்து இருந்தார்.

ஆண்டு இறுதி பரிசு
இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஐஐடி, ஐஐஎம்களி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் நரேந்திரமோடி அரசாங்கத்தின் மற்றொரு ஆண்டு இறுதி பரிசு என மீண்டும் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து வியாழன் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சிதம்பரம் மத்திய பல்கலைக்கழகங்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம் களில் காலியாக உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து மோடி அரசாங்கத்தின் மற்றொரு ஆண்டு இறுதி பரிசு என விமர்சித்துள்ளார்.

அமைச்சரின் பதில்
மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய பல்கலைக்கழகங்களில் 7535 முழு நேர ஆசிரியர் பணியிடங்கலும், ஐஐஎம்களி 403 ஆசிரியர் பணியிடங்கள் , ஐஐடிகளில் 3876 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

பா.சிதம்பரம் விமர்சனம்
இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம் மோடி அரசாங்கத்தின் மற்றொரு ஆண்டி இறுதிப் பரிசு மத்திய பல்கலைக்கழகங்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன எனவும் இவற்றில் 4126 பணியிடங்கள் எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் ஆச்சரியம்
ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதை அவர்கலின் முதன்மை நோக்கம் என தாங்கள் நினைத்ததாகவும் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று நான் ஆச்சரியப்படுகிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications