பிரபல பிக் பாஸ் புகழ் நடிகை நள்ளிரவில் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ஷிபாலி ஜெரிவாலா நள்ளிரவில் திடீர் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியாக தெரியாத நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானவரும் 'கந்தா லகா" படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற பிரபல நடிகை ஷிபாலி ஜெரிவாலா நள்ளிரவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. இரவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவசர அவசரமாக மும்பையில் உள்ள பெல்வியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து குடும்பத்தினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஷிபாலி ஜெரிவாலாவின் உடல் பிரேத பரிசோதானைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் வீட்டில் வேலை செய்து வருபவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷிபாலி ஜெரிவாலா கடந்த 2002 ஆம் ஆண்டு 'காந்தா லாகா' பாடலில் ஆடியிருந்தார். இந்த பாடல் அவருக்கு பெரிய அளவில் புகழை தேடி தந்தது. பின்னர் பிக் பாஸ் 13 இல் அவர் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
ரியாலிட்டி ஷோவில் ஷெபாலி, வெளிப்படுத்திய தன்னம்பிக்கை மற்றும் தெளிவு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியது. சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த 2004 ஆம் ஆண்டு திரைப்படமான 'முஜ்ஸே ஷாதி கரோகி' திரைப்படத்திலும் ஷெபாலி ஜரிவாலா நடித்துள்ளார். ஷெபாலிக்கு கடந்த 2015 திருமணம் நடைபெற்றது.
ஷெபாலி ஜரிவாலாவின் மரணம் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications