டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சோனியா காந்தி யார் மீதும் கோபத்தில் இல்லை.. மீட்டிங்கில் நடந்தது என்ன? காங். காரிய கமிட்டி விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சோனியா காந்தி யார் மீதும் கோபத்தில் இல்லை, அவரே காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று இன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய வேண்டும், என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இதனால் காங்கிரஸ் காரிய கமிட்டி விரைந்து புதிய தலைவரை தேர்வு செய்ய பணிகளை தொடங்க வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இப்போது இது தேவையா?.. கோபப்பட்ட ராகுல்.. புண்பட்ட சோனியா மனது.. அந்த கடிதத்தில் என்னதான் இருந்தது?இப்போது இது தேவையா?.. கோபப்பட்ட ராகுல்.. புண்பட்ட சோனியா மனது.. அந்த கடிதத்தில் என்னதான் இருந்தது?

பேட்டி அளித்தனர்

பேட்டி அளித்தனர்

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி வேணுகோபால் மற்றும் ரன்தீப் சூர்ஜ்வாலா ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். அதில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் 4 முதல்வர்கள் உட்பட 52 பேர் பங்கேற்றனர்.கட்சிக்குள் நிலவும் அனைத்து விஷயங்களையும் வெளியே தெரிவிக்க முடியாது.கட்சியின் தலைமைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் யாரும் செயல்பட கூடாது.

கட்சி எப்படி

கட்சி எப்படி

காங்கிரஸ் காரிய கமிட்டி இதை எப்போதும் அனுமதிக்காது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான சக்திகளை எதிர்க்க வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியின் ஒரே இலக்கு மோடியின் அரசை, மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதே.காங்கிரஸ் மிகப்பெரிய குடும்பம், எங்களுக்குள் சில வேறுபாடுகள் உள்ளது. ஆனால் முடிவில், நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம்.நாட்டிற்காக, மக்களுக்காக போராட வேண்டிய நேரம் இது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

கட்சி ரீதியான பிரச்சனைகள் எப்போதும் தீர்க்கப்பட்டு உள்ளது. கட்சியில் கொள்கைகள், மாற்றங்களை அவ்வப்போது முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். சோனியா யார் மீதும் கோபத்தில் இல்லை. யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் முடிவில் சோனியா காந்தி இல்லை. எல்லோரும் சக குடும்ப உறுப்பினர்கள் என்பதில் சோனியா உறுதியாக உள்ளார்.

விவாதம் செய்தனர்

விவாதம் செய்தனர்

உறுப்பினர்கள் எல்லோரையும் தனது குடும்பம் போல சோனியா பார்க்கிறார். இந்த மீட்டிங்கில் கொரோனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிக்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரிய கமிட்டி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இருவரும் பேட்டி அளித்தனர்.

English summary
Sonia Gandhi is not angry with anyone says CMC members after the party meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X