டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகிந்த ராஜபக்சேவுடன் சந்திப்பு.. தமிழில் ட்வீட் வெளியிட்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். தனது ஐந்து நாள் இந்திய பயணத்தின் முதல் நாளில் இந்த சந்திப்பு ராஷ்டிரபதி பவனில் நடந்தது.

இதுதொடர்பாக, தமிழில், ராம்நாத் கோவிந்த் டுவிட் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் வளர்ச்சி அதன் அயல்நாடுகளின் செழுமை மற்றும் அமைதியுடன் இணைந்திருப்பதாக நாம் உறுதியாக நம்புகிறோம். ஸ்திரமானதும் செழுமை நிறைந்ததுமான இலங்கையே இந்தியாவின் சிறந்த நலன். ஜனாதிபதி கோவிந்த் இலங்கையில் கடந்தவருடம் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்ததுடன் இரு தலைவர்களும் பயங்கரவாதத்தை போராடித் தோற்கடிக்க உறுதி பூண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sri Lankan PM Mahinda Rajapaksa calls on President Ram Nath Kovind

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார், அங்கு இரு தரப்பினரும் தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, இலங்கையில் கூட்டு பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினர்.

Sri Lankan PM Mahinda Rajapaksa calls on President Ram Nath Kovind

இந்த சந்திப்புக்கு பின்னர் ஒரு செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கை அரசு, தங்கள் நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்" அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை அடுத்தடுத்து, சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள, மகிந்த ராஜபக்ஷே, ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு புறப்படுவார், அங்கு காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சாரநாத் புத்த கோவிலுக்கு சென்று வழிபடுவார். அவரது வருகையையொட்டி, வாரணாசியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa on Saturday called on President Ram Nath Kovind at the Rashtrapati Bhavan here during the Delhi leg of his five-day visit to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X