காலையிலேயே குலுங்கிய பூமி.. ஹரியானாவை தொடர்ந்து டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. மக்கள் பீதி
டெல்லி: டெல்லியில் சற்று நேரத்துக்கு முன்பு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.04 மணிக்கு டெல்லி என்சிஆர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் 4.4 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உணரப்பட்ட நிலையில் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியும், ஹரியானாவும் பக்கத்தில் உள்ளன. இந்நிலையில் தான் இன்று காலையில் ஹரியானாவில் ஜஜ்ஜார் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பறங்களில் உணரப்பட்டது.
டெல்லியில் இன்று காலை 9.04 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நொடிகள் வரை பொதுமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். கடைகள், வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடு, கடைகளை விட்டு வெளியே வந்துவிட்டனர்.
இந்த நிலநடுக்கம் ஹரியானாவின் குர்கிராம், என்சிஆரின் பரிடாபாத், ஹிசார், ரோடாக், சோனிபேட், டெல்லியின் அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛ஹரியானாவில் ஜஜ்ஜார் பகுதியில் காலை 9.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் ஹரியானாவில் ரோஹ்டாக் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications