மாணவர்கள், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றே நீட்,ஜேஇஇ தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
டெல்லி: மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோள்களை ஏற்றுதான் நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் நீடிப்பதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்கள் வழக்கு தொடர உள்ளனர்.

ரமேஷ் பொக்ரியால் அறிக்கை
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீட்,ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்துள்ள விளக்கம்:

மாணவர்கள் வேண்டுகோள்
மத்திய அரசைப் பொறுத்தவரையில் மாணவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் மிகவும் முக்கியமானது. நீட், ஜேஇஇ தேர்வுகள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. உச்சநீதிமன்றமும் இந்த தேர்வுகளை நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த வேண்டும் என்று இ மெயில்கள் மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

கல்வி ஆண்டு முக்கியம்
ஆகையால் மாணவர்களது ஒரு கல்வி ஆண்டை நாங்கள் பாழாக்க விரும்பவில்லை. இதனாலேயே நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.50 லட்சம் மாணவர்கள் அட்மிட் கார்டுகளை டவுன்லோடு செய்துள்ளனர்.

அட்மிட் கார்டு டவுன்லோடு
இதேபோல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15 லட்சம் மாணவர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அட்மிட் கார்டுகளை டவுன்லோடு செய்திருக்கின்றனர். தேர்வு மையங்களைப் பொறுத்தவரையில் மாணவர்கள் விரும்பிய மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தேர்வு மையங்கள்
மாணவர்கள் பலமுறை தேர்வு மையங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்திருந்தனர். இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு 99% மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தேர்வு மையங்கள் மாற்றம் தொடர்பாக 400 கோரிக்கைகள்தான் நிலுவையில் உள்ளன. அத்துடன் தேசிய தேர்வு ஏஜென்சியானது உரிய வழிகாட்டுதல்களை ஏற்கனவே வெளியிட்டும் இருக்கிறது. மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications