டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜேந்திர பாலாஜி மட்டும் ஸ்பெஷலா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.. ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் இருக்கும்போது ஒரு நாள் கூட ராஜேந்திரபாலாஜியால் சிறையில் இருக்க முடியாதா ? என கடுமையாக தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருச்சி சிறையில்.. சுதந்திர தியாகி 'நேதாஜி' புத்தகங்களை புரட்டும் ராஜேந்திர பாலாஜி.. சுவாரசிய தகவல்திருச்சி சிறையில்.. சுதந்திர தியாகி 'நேதாஜி' புத்தகங்களை புரட்டும் ராஜேந்திர பாலாஜி.. சுவாரசிய தகவல்

இதனைதொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஜாமீன் கோரி மனு

ஜாமீன் கோரி மனு

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜி கைது செய்ய தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக பல ஏழை மக்களை ஏமாற்றி இருப்பதாகவும் அதனை சாதாரணமாக கடந்து போக முடியாது என்றும் தொடர்ந்து அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால்தான் அவரை கைது செய்ததாகவும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

நீதிமன்றத்தில் வாதம்

நீதிமன்றத்தில் வாதம்

இதனைதொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் அவரை கைது செய்யக்கூடாது என கோரினோம், மேலும் வழக்கை விரைந்து பட்டியலிட வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தும், அதனை மீறி ராஜேந்திர பாலாஜியை கைது செய்துள்ளனர். கொரொனா காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை வேண்டாம் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை மீறு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

ராஜேந்திர பாலாஜி மோசடி செய்யவில்லை

ராஜேந்திர பாலாஜி மோசடி செய்யவில்லை

மேலும் ராஜேந்திர பாலாஜி பெயரை தவறாக பயன்படுத்தி அதிமுக கட்சியின் உறுப்பினராக இருந்த விஜயநல்லதம்பி தான் பணம் பெற்றுள்ளார் என்ரும், இவர் ராஜேந்திர பாலாஜியின் உறவினரும் கிடையாது எனவும், மேலும் இந்த விஜயநல்லதம்பி தான் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு சென்று தான் அமைச்சரிடம் பேசி விட்டதாகவும் வேலைக்காக 35 லட்ச ரூபாய் பணம் ஆகும் என கூறியுள்ளார் மேலும், எந்த இடத்திலும் ராஜேந்திர பாலாஜி பணம் கேட்டதாகவும் தன்னிடம் பணம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு இல்லை என தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அரசியல் காழ்ப்புணர்ச்சி

வழக்கில் நேரடிநாக எந்த இடத்திலும் சம்மந்தப்படாத ராஜேந்திர பாலாஜியை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கைது செய்துள்ளனர் எமவும், மேலும் கொரோனா காலம் என்பதால் ஒரு மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது இதனடுத்து வாதிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் , இந்த விவகாரம் மிகவும் தீவிரமானதாக கருதுவதற்கு காரணம்
அரசு வேலை வாங்கி தருவதாக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள் ஏழை, நடுத்தர மக்கள் எனவும், 32 பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் கொடுத்துள்ளனர் எனவும், பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டவர்களின் புகார் அடிப்படையில் தான் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

விசாரணை காவல்

விசாரணை காவல்

மேலும், ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்யவில்லை, ஏமாற்றவில்லை என்றால் முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவுடன், ஏன் அவர் விசாரணைக்காக ஆஜராகவில்லை? எனவும், இந்த வழக்கில் ஆவண, ஆதாரங்கள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உள்ளதால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கு எனக்கூறி இந்த விவகாரத்தை நீர்த்துபோக செய்யும் யுக்தியை ராஜேந்திர பாலாஜி கடைபிடித்துள்ளார் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க ராஜேந்திர பாலாஜியை போலிஸ் காவல் விசாரணைக்கு எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

அப்போது, நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜிக்கு 1 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கலாமே ? அந்ந இடைப்பட்ட காலத்தில் காவல்துறை விசாரணையை முடிக்கலாமே என கருத்து தெரிவித்தார். அதற்கு தமிழக அரசு தரப்பு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதோடு, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான கூடுதல் ஆதார, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவே வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் இருக்கும்போது ஒரு நாள் கூட ஜேந்திரபாலாஜி யால் சிறையில் இருக்க முடியாதா எனவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள , குற்றம் தொடர்பாட கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

English summary
Can't Rajendrapalaji stay in jail even for a day when thousands are in jail? As strongly argued on behalf of the Government of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X