வேலை மோசடி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செந்தில் பாலாஜி மீது வழக்கு பதியாதது ஏன்? போலீசுக்கு நோட்டீஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை போலீசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: வேலை மோசடி வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யாத சென்னை குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. கடந்த 2011-15ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தார் என்பது புகார்.

அதாவது 2014ம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சகோதரர் அசோக்குமார், தனி உதவியாளர் சண்முகம் மற்றும் எம்டிசி ஊழியர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினார் என்பது புகார்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2015ம் ஆண்டு சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, எம்டிசியில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மெக்கானிக் பணியில் சேர விரும்பிய நபர்களிடம் பெரும் தொகையை பாஸ்கர் மற்றும் சக ஊழியர்கள் பழனி, கேசவன் மற்றும் பலர் சேர்ந்து வசூலித்து ஏமாற்றியுள்ளனர். தேவசகாயம் என்பவரின் மகனுக்கு பேருந்து நடத்துநர் பணிக்காக ரூ.2,60,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த ஊழலில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் 2016ம் ஆண்டு அளித்த புகாரின்படி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூ.2.31 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஏப்ரல் 2019 இல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் வசூலித்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.எல்.ஏ, எம்பிக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் ஏமாற்றப்பட்டவர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் 2021 இல், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் பணம் செலுத்தும் சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர். சமரசம் மற்றும் சண்முகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்தது. ஆனால் இதனை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என அறிவித்தனர். மேலும் இந்த வழக்கை முழுமையாக முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்; இவ்வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால் சென்னை குற்றப்பிரிவு போலீசார், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதனை அடுத்து சென்னை போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று சென்னை குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறையும் தலையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications