தி கேரளா ஸ்டோரி- தமிழ்நாடு அரசு மறைமுகமாக தடை செய்யக் கூடாது- மே.வங்க தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்
டெல்லி: சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாடு அரசு மறைமுகமாக தடை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையையும் உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்து பெண்கள் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்க் மத மாற்றம் செய்யப்படுகின்றனர்; அப்படி மதமாற்றம் செய்யப்படுகிற பெண்கள், ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்டோருக்கு பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதை அடிப்படையாகக் கொண்டது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்.
இதனால் இத்திரைப்படம் பெரும் சர்ச்சையானது. இத்திரைபப்டத்துக்கு தடை விதிக்க கோரி கேரளா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் தி கேரளா ஸ்டோரிக்கு தடை விதிக்கப்படவில்லை.
இதனிடையே தமிழ்நாட்டில் இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட மறுத்தனர். மேலும் மேற்கு வங்க மாநில அரசு, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடையும் விதித்தது, இதனை எதிர்த்து இத்திரைப்பட தயாரிப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்றனர்.
பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு அரசு மறைமுகமாக தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யக் கூடாது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இப்படம் ஒரு கற்பனை கதை என்பதை திரைப்படத்தில் படத் தயாரிப்பு தரப்பும் சேர்க்க வேண்டும். மேலும் மேற்கு வங்கத்தில் மாநில அரசு பிறப்பித்திருக்கும் மே 8-ந் தேதி தடை உத்தரவு நீக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications