டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 நாள் வேணுமா? 240 மணி நேரம் வேணுமா? சிபிஐ வழக்கில் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கிண்டல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிபிஐ வழக்கில் மத்திய அரசிடம் கிண்டல் செய்த உச்சநீதிமன்றம்!- வீடியோ

    டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

    இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார். இதற்கு எதிராக அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

    [ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்தது மோடி அரசுதான்.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பரபர பேட்டி]

    விசாரிப்பர்

    விசாரிப்பர்

    இந்த நிலையில் இந்த மாற்றம் குறித்து மத்திய விஜிலென்ஸ் கமிஷன் விசாரிக்க இருக்கிறது. அலோக் வெர்மா ஏன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று விஜிலென்ஸ் கமிஷன் விசாரிக்கும். அதன்பின் அந்த அறிக்கையை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே பட்நாயக் சோதனை செய்வார். அதன்பின்பே அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

    மாற்றம் குறித்த முடிவுகள்

    மாற்றம் குறித்த முடிவுகள்

    அதேபோல் தற்போது ''ஆக்டிங்'' சிபிஐ இயக்குனர் எம் நாகேஸ்வர் ராவ் சில முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நாகேஸ்வர் ராவ் எடுத்த முடிவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் 14 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததற்கான காரணத்தை சீல் செய்யப்பட்ட கவரில் அளிக்க வேண்டும்.

    முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது

    முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது

    அதேபோல் இந்த விசாரணை முடியும் வரை தற்போதைய சிபிஐ ஆக்டிங் இயக்குனர் நாகேஸ்வர் ராவ் எந்த முடிவும் எடுக்க கூடாது. கொள்கை முடிவுகளை நாகேஸ்வர் ராவ் எடுக்க கூடாது. மற்ற முடிவுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் முன் சமர்பிக்க வேண்டும்.

    எவ்வளவு நேரம்

    எவ்வளவு நேரம்

    முதலில் இந்த வழக்கை விசாரிக்க மத்திய விஜிலென்ஸ் கமிஷன் 10 நாட்கள் போதாது அதிக நேரம் வேண்டும் என்று கேட்டது. உடனே அப்படியென்றால் 240 மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கிண்டல் செய்தார். கடைசியில் இரண்டு வார கால அவகாச கொடுத்து இருக்கிறார்கள்.

    English summary
    Supreme Court slams Central Government on CBI director case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X