அதிமுக குறித்த தேர்தல் ஆணையத்தின் குழப்பமான நடவடிக்கை- உச்சநீதிமன்றத்தில் அனல் பறக்க போகும் வாதம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவில் இபிஎஸ் கோஷ்டிக்கு சாதகமான முடிவுகளை எடுத்து தேர்தல் ஆணையம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இபிஎஸ், ஓபிஎஸ்- இருவரையும் அங்கீகரிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வரும் போது தேர்தல் ஆணையத்தின் இந்த குழப்பமான நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

சென்னை வானகரத்தில் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழுவை ஒருதலைபட்சமாகக் கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற விதியும் கூட ரத்து செய்யப்பட்டது.

Supreme Court to consider Election Commissions stand on AIADMK Posts?

ஆனால் இப்பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை11-ல் இபிஎஸ் கோஷ்டி கூட்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்; அத்துடன் ஜூலை 11-ல் இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லும் எனவும் தீர்ப்பு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் 4-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அதிமுக தொடர்பாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை ஏற்றுக் கொண்டு வெப்சைட்டில் வெளியிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்ட போது, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் கடிதம் அனுப்பியது.

தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் இயந்திரம் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். அப்படி ஒரு பதவியே இல்லை என அதிமுக இபிஎஸ் கோஷ்டி இந்த கடிதத்தை திருப்பி அனுப்பியது. ஆனாலும் தேர்தல் ஆணையம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறி, மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கே இக்கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாடுகள் வரும் 4-ந் தேதி நடைபெறும் உச்சநீதிமன்ற விசாரணையில் கடுமையான வாதங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+