பஞ்சாப் சம்பவம்.. 'அவர்களை சஸ்பெண்ட் செய்யுங்கள்..' நேரடியாக தலையிட்ட சூப்ரீம் கோர்ட்.. பரபர தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசுத் திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைக்க நேற்று பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். ஹுசைன்வாலாவில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பதாக இருந்தது.
முதலில் பஞ்சாப் பதிண்டா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அவர் ஹுசைன்வாலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாகப் பிரதமர் மோடி, சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை கார் மூலம் செல்லும்படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வெறும் 10 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில், மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் காரை விவசாயிகள் மறித்தாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடு
இது தொடர்பாக வெளியான ஃபோட்டோக்களில் மேம்பாலம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பிரதமர் மோடி காத்திருக்கிறார். அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடி இருந்தனர். பெரும்பாலான விவசாயிகள் சில மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அருகே கூடி இருந்தனர். இப்படியே சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி காத்திருந்தார். அதன் பின்னர் வேறுவழியின்றி பிரதமர் மோடியின் கார் திரும்பியது. பிரதமரின் பாதுகாப்பு பிரோடோகாலில் இது மாபெரும் குறைபாடாக பார்க்கப்படுகிறது.

குடியரசு தலைவருடன் சந்திப்பு
இதற்கிடையே டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். பஞ்சாபில் நடந்த சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உளவு துறை ரிப்போர்ட்கள் எனக் கூறி பாஜக சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அதில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், வானிலை காரணமாகக் கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் திட்டம் மாறலாம் என்றும் அப்போது கார் செல்லும் பாதையில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

கடும் அதிருப்தி
இது தொடர்பாக உள் துறை அமைச்சகமும் பஞ்சாப் போலீசார் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளது. அதாவது பாதுகாப்பு உறுதி செய்யப்படாத வழியில் பிரதமரின் கார் எப்படி செல்லாம்? விவசாயிகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் இருக்கும் நிலையில், இந்த பாதையில் செல்ல சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஒப்புக் கொண்டது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன,

உச்ச நீதிமன்றம்
இது தொடர்பாகப் பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே உள் துறை அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோரை இடைநீக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை விசாரணை
வழக்கு விசாரணையின் போது மனுதாரர் கூறுகையில், "இதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு மனுவின் நகலை அரசிடம் தாக்கல் செய்யச் சொன்ன தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யக் குழு ஒன்றைப் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.
Recommended Video

முதல்வர் விளக்கம்
இது தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், "ஒரு பஞ்சாபியாகப் பிரதமர் மோடியைக் காக்க நான் உயிரைக் கூட கொடுத்திருப்பேன். ஆனால், அதுபோல இங்கு எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்பதே உண்மை. பிரதமரின் வருகைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் பிரதமரின் பயணத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications