Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி.. வந்தாச்சு குட்நியூஸ்.. இனி இவர்களுக்கும் பணம்.. மத்திய அரசு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த எதிர்பார்ப்பு எகிறி வரும்நிலையில், திடீரென மத்திய அரசு ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. என்ன அது?

கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது.. ஆனால், அது 2016ல்தான் அமல்படுத்தப்பட்டது.. எனினும், 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகிறது.

Surprise for Central Government Employees and pension for the children of government Staffs

அறிவிப்புகள்: ஆனால், 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக, மழைக்கால கூட்டத்தொடரின்போது அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.. ஆனால், எதுவும் வரவில்லை. அதற்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம்தேதி இடைக்கால பட்ஜெட்டின்போது அரசு ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்கள்.. ஆனால், எதுவும் வரவில்லை.

எனினும், சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாக உள்ளது. மேலும், எம்பி தேர்தல் வரஉள்ளதால், இதனை கணக்கிட்டு, முன்கூட்டியே 8வது ஊதியக்குழு அமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான, ஃபிட்மெண்ட் காரணி 2.57 ஆகவும், அடிப்படை ஊதியம் 18000 ஆகவும் உள்ள நிலையில், 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்..

அடிப்படை சம்பளம்: எப்படி பார்த்தாலும், 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், ரூ.18000லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 சம்பளம் உயரக்கூடும் என்றும், 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.. ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள்: அதாவது, மத்திய அரசின் ஓய்வூதிய விதிப்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களது கணவர் அல்லது மனைவிக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஓய்வூதியம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெண் பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்களது கணவருக்கு பதிலாக பிள்ளைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான வாரிசுகளாக நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மகிழ்ச்சி: விவாகரத்து பெறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகளை தவிர்க்கும் வகையில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பானது, பெரும் மகிழ்ச்சியை அரசு ஊழியர்களின் தரப்பில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+