பியூட்டி பார்லர் ஓனர் வீட்டில் என்னாச்சு.. பாத்ரூமில் கருகிய தமிழ்பெண்.. டெல்லி போலீசுக்கு நோட்டீஸ்
தமிழகத்தை சேர்ந்த பெண் மரணம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது
டெல்லி: டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி போலீசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் இளம்பெண் லட்சுமி.. 21 வயதாகிறது.. டெல்லியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் ஒருவரது வீட்டில் வேலை செய்து வந்தார். ஜல்விஹார் பகுதியில் இந்த வீடு இருக்கிறது.
நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல, லட்சுமி வீட்டில் இருந்து புறப்பட்டு ஜல்விஹார் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார்... ஆனால், 8.30 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார்..

அதிர்ச்சி
வேலை செய்துவந்த வீட்டின் பாத்ரூமில் எறிந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது... இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதனால் பொதுமக்கள் அந்த வீட்டின் முன்பு திரண்டுவிட்டனர்.. போலீசுக்கும் தகவல் போனது.. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்ததில், பாத்ரூமில் கரண்ட் ஷாக் அடித்து லட்சுமி இறந்துவிட்டதாக, வீட்டின் உரிமையாளர் காரணம் சொன்னார்..

போராட்டம்
ஆனாலும், மின்சாரம் தாக்கியதற்கு எந்த தடையமும் பாத்ரூமில் காணப்படவில்லை.. லட்சுமியின் உடல் முழுமையாக தீயில் எரிந்து கருகியிருந்தது.. இதன்காரணமாக லட்சுமி மரணத்தில் சந்தேகம் மேலும் வலுத்து வருகிறது.. வேலைக்கு சென்ற பெண், திடீரென ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்ட சம்பவம் கேள்விப்பட்டு, அந்த பகுதியில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

கோரிக்கை
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. திடீரென தமிழ்வாழ் மக்கள் ஒன்றுகூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து, லட்சுமியின் சடலத்தை போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. இன்னும் ரிப்போர்ட் வரவில்லை.. பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கு பிறகுதான் முழுமையான விவரம் தெரியவரும்...

கள்ளக்குறிச்சி
லட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.. அதற்கான ஏற்பாட்டையும் குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.. இந்த மரணம், கள்ளக்குறிச்சியையும் சேர்த்து அதிரவைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி இரண்டும் பாத்ரூமில் இருந்ததாக, லட்சுமியின் தாய் அங்கம்மாள் புகார் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது..

கைது
இப்போதைக்கு இந்த சம்பவம் தொடர்பாக ப்யூட்டி பார்லர் ஓனர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்... மேலும் தேசிய மகளிர் ஆணையம் லட்சுமியின் மர்ம மரணத்தை கையில் எடுத்துள்ளது.. டெல்லி காவல்துறைக்கு இந்த மரணம் குறித்து வழக்குப்பதிந்து தொடர்புடைய நபர்களை கைது செய்யவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications