டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அது" இனிமே கடைகளில் விற்க தடை?.. "சிகரெட்" பிடிப்பவரா நீங்கள்.. புது அறிவிப்பு.. சபாஷ் மத்திய அரசு

ஒற்றை சிகரெட் விற்பனைக்கு மத்திய அரசு இனி தடை விதிக்க போகிறதாம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இனிவரும் நாட்களில், ஒற்றை சிகரெட்டுகளை கடைகளில் விற்க தடை வர போகிறதாம்.. மத்திய அரசு இதற்காகவே புதிய சட்டம் ஒன்றினை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புகை நமக்கு பகை என்பது முதல், புற்றுநோயை உண்டாக்கக்கூடியது சிகரெட் என்பது வரை அனைவருக்குமே தெரிந்திருந்தாலும், சிகரெட்டின் பயன்பாடுகள் அதிகரித்தபடியேதான் உள்ளன.

புகைப்பழக்கம் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற புகையிலை எதிர்ப்பு அமைப்பு வழங்கிய அறிக்கையின்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 6.6 கோடி மக்கள் சிகரெட் பிடிக்கிறார்களாம்..

ஆளுநருக்கு கோடி கோடியாய் செலவிடும் தமிழ்நாடு.. இந்தியாவில் முதலிடம்! ரிப்போர்டால் “ஸ்டன்” ஆன பிடிஆர் ஆளுநருக்கு கோடி கோடியாய் செலவிடும் தமிழ்நாடு.. இந்தியாவில் முதலிடம்! ரிப்போர்டால் “ஸ்டன்” ஆன பிடிஆர்

கஸ்டமர்கள்

கஸ்டமர்கள்

மேலும் 26 கோடி மக்களுக்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது.. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் 21% நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது... புகையை தவிர்க்க வேண்டும் என்று எத்தனையோவிதமான பிரச்சாரங்களும், விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது... அப்படி இருந்தும், இதற்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை.. அதனால்தான், சிகரெட்டை கட்டுப்படுத்தும் விதமாக, கடைகளில் கஸ்டமர்களுக்கு ஒற்றை சிகரெட் விற்பதை தடுப்பதற்காகவே சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது...

 மோகம் சிகரெட்

மோகம் சிகரெட்

அதாவது சிகரெட் முழு பெட்டியாக இல்லாமல், ஒரே சிகரெட்டை நிறைய பேர் வாங்குகிறார்கள்.. குறிப்பாக, ஏழை மக்கள், இளைஞர்கள் இந்த ஒற்றை சிகரெட்டை அசால்ட்டாக வாங்கி செல்கிறார்கள்.. கட்டப்படாத புகையிலைப்பொருட்களின் மோகமும் அதிகம் உள்ளது.. ஒற்றை சிகரெட்களை நிறைய வாங்குவதால், பல இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதாகவும், இதனால் உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாகிவிடுவதாகவும் கூறுகிறார்கள். அதனால்தான், இனிமேல் சில்லறையாக சிகரெட்டை விற்க தடை செய்ய போகிறதாம் மத்திய அரசு..

 சில்லறை சிகரெட்

சில்லறை சிகரெட்

அதன்படி, நாட்டில் ஒற்றை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்துள்ளது... மேலும் புகை பிடிக்கும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, ஏர்போர்ட்களில் புகைபிடிக்கும் பகுதிகளை மூடும்படியும், குழு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.. அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பொதுபட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட உள்ளன.. காரணம், புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிப்பது, மத்திய அரசின் உடனடி வருவாயை உயர்த்துவதற்கான மிக பயனுள்ள கொள்கை நடவடிக்கையாக இருக்கும் என்கிறார்கள்..

 நோ சிகரெட்

நோ சிகரெட்

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் குறைந்த விலையில் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைப்பது தடை செய்யப்படுவதோடு, விலைமதிப்பில்லா பல இளைஞர்களின் எதிர்காலமும் காப்பாற்றப்படும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. எப்படி பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்பதை தீவிரமாக எல்லா இடங்களும் பின்பற்றப்படுகிறதோ, அதேமாதிரி, புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.. இந்த லிஸ்ட்டில் ஒற்றை சிகரெட்டுகள் விற்பனை தடை விதிக்கப்படுவதும் இணைகிறது.. எப்படியோ, இனிமேல், கடைகளில் 1, 2 சிகரெட்களை வாங்க முடியாது..!!

English summary
Sweet news and selling of single cigarettes to be illegal in india govt to introduce soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X