டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர்.. "கோவின்" வெப்சைட்டுக்கு திரும்பி வந்த "செம்மொழி".. தமிழ்நாட்டின் கோரிக்கை எதிரொலி!

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழை ஏன் புறக்கணிக்கிறீங்க? என்று மாநில அரசு, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியதையடுத்து, கோவின் வெப்சைட்டில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Pregnancy, Periods இருக்கு போது பெண்கள் VACCINE எடுக்கலாம் | Dr.Karthika தெளிவான விளக்கம்

    தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக நமக்கு அமைந்து வருகிறது.. எனவே, மக்களும் தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் "கோவின்" என்ற வெப்சைட் தொடங்கப்பட்டது.

    18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட இன்று முதல் கோவின் செயலியில் முன்பதிவு தொடக்கம்! 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட இன்று முதல் கோவின் செயலியில் முன்பதிவு தொடக்கம்!

    கோவின்

    கோவின்

    இது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு ஏற்ற வடிவில் "கோவின்" என்ற செயலியாகவும் இருக்கும். இந்த கோவின் வெப்சைட்டில், ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன... அதற்கு பிறகு, கடந்த 4-ம் தேதி பிற மாநில மொழிகளும் கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டன.

     சர்ச்சை

    சர்ச்சை

    இதையடுத்து, மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா போன்ற 9 மொழிகளும் அடுத்தடுத்து இடம்பெற்றன. ஆனால், தமிழ் மொழி மட்டும் அதில் இடம்பெறவேயில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது..

     ஹிந்தி

    ஹிந்தி

    கோவின் வெப்சைட் பக்கத்தில் தமிழ் ஏன் சேர்க்கப்படவில்லை? பிற மொழிகள் சேர்த்திருக்கும்போது, பண்டைய மொழியான தமிழையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை மற்ற மொழிகளை கோவின் செயலியில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது. அத்துடன் அடுத்த 2 நாளில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தது..

     சுகாதாரத்துறை அமைச்சகம்

    சுகாதாரத்துறை அமைச்சகம்

    இப்போது கோவின் இணையதளத்தில் 12 வது மொழியாக தமிழும் இடம்பெற்றுள்ளன. அதில், ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அசாமி, பெங்காலி, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. இப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவின் வெப்சைட்டில் 11 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன...!

    English summary
    Tamil Language add in CoWIN website
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X