டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. தமிழகம்+டெல்லி சேர்த்தால், மகாராஷ்டிராவைவிட 2 மடங்கு அதிகம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம் மற்றும் டெல்லி ஆகிய இரு மாநிலங்களில் பதிவாகி வரும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது, மகாராஷ்டிராவில் தினசரி பதிவாகும் பாதிப்புகளை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

Tamil Nadu reporting over twice as many new active cases as Maharashtra

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,56,611 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 4.2% அதிகரிப்பாகும். நேற்றைய நிலவரப்படி ஒரு புள்ளி விவரத்தை பார்க்கலாம்.

இந்தியாவில், கொரோனா பலி எண்ணிக்கை 6,929, என்ற அளவாக இருந்தது. 287 பேர் என்பது ஒரே நாளின் பலி எண்ணிக்கையாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதிதாக 206 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, 5,220 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 48.4%. பலி விகிதம் 2.8%

சூப்பர்.. ஒரே திட்டத்தில்.. அசரடித்த மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்ப்புசூப்பர்.. ஒரே திட்டத்தில்.. அசரடித்த மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பு

16.8 நாட்களுக்கு ஒருமுறை, கேஸ்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் புதிதாக 1,515 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 5 மாநிலங்கள், மிக அதிக சிங்கிள் நாள் பாதிப்பை பதிவு செய்தன. மகாராஷ்டிரா (2,739), தமிழ்நாடு (1,458), டெல்லி (1,320), குஜராத் (498), மேற்கு வங்கம் (435).

சதவீத அடிப்படையில், மொத்த கேஸ்களில் அதிக தினசரி அதிகரிப்பு சிக்கிம் (50%), மிசோரம் (29%), புதுச்சேரி (21%), நாகாலாந்து மற்றும் கோவா (தலா 18%), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (17%) , சத்தீஸ்கர் (16%), கர்நாடகா (12%), ஜார்க்கண்ட் (11%) என்ற அளவில் உள்ளது.

Tamil Nadu reporting over twice as many new active cases as Maharashtra

கடந்த 21 நாட்களாக ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட கேஸ்கள் மகாராஷ்டிராவில் பதிவாகிறது. இந்த 21 நாட்களில் மட்டும் 63% (52,262) கேஸ்கள் பதிவாகியுள்ளன. கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் மேற்பட்ட தினசரி கேஸ்கள் தமிழகத்தில் பதிவாகிறது. இந்த 7 நாட்களில் மட்டும் 30% (8,968) கேஸ்கள் புதிதாக சேர்ந்துள்ளன.

டெல்லியில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 9,105 கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதன் மொத்த பாதிப்பில் இது 33%. தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவற்றின் தினசரி கேஸ் எண்ணிக்கை, மகாராஷ்டிராவைவிட 2 மடங்கு அதிக பாய்ச்சலில் போய்க் கொண்டு இருக்கிறது.

English summary
Tamilnadu and Delhi coronavirus cases increased compare to Maharashtra, here is the full detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X