டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் அப்படி இல்லையே.. காஷ்மீர் குறித்த உரையில் அமித் ஷா சொன்ன எடுத்துக்காட்டால் பரபரப்பு!

சிறப்பு அந்தஸ்து இல்லாமலே தமிழ்நாட்டில் தமிழ் மொழி காக்கப்பட்டு இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah : எதிர்கட்சிகளை சமாளிக்க அமித் ஷா செய்த செம்ம தந்திரம்- வீடியோ

    டெல்லி: சிறப்பு அந்தஸ்து இல்லாமலே தமிழ்நாட்டில் தமிழ் மொழி காக்கப்பட்டு இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் பேசி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுக்க இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக தலைவர்கள் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த மசோதா தொடர்பாக தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்துள்ளார்.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    அமித் ஷா தனது உரையில், காஷ்மீரை நாங்கள் இன்னும் ஐந்து வருடங்களில் மொத்தமாக மாற்றுவோம். காஷ்மீர் என்பது இந்தியாவிற்கு மணிமகுடம் போல. அதை நாம் பாதுகாக்க வேண்டும். காஷ்மீரை 370 சட்டம் இத்தனை நாட்கள் சிதைத்துக் கொண்டு இருந்தது. மக்களை வளர விடமால் தடுத்தது.

    மாநிலம்

    மாநிலம்

    சிறப்பு அதிகார சட்டம் இல்லாமல் மற்ற மாநிலங்கள் எல்லா நன்றாக இருக்கிறது. சிறப்பு சட்டங்கள் இல்லாமல் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த சட்டம் இல்லாமல்தான் முன்னேறி உள்ளது.

    எப்படி மொழி

    எப்படி மொழி

    இந்த சட்டம் இல்லாமலே அவர்களின் மொழி காக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லையே. அவர்களின் மொழிக்கு இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் காஷ்மீரின் கலாச்சாரத்திற்கும் எந்த பிரச்சனையும் இதனால் ஏற்படாது. மோடி ஆட்சிக்கு வந்ததால்தான் தற்போது இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

    முழுமை

    முழுமை

    ஜம்மு காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைத்து இருக்கிறோம். இந்த சட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் காஷ்மீரில் பலர் உயிரோடு இருந்திருப்பார்கள். காஷ்மீரில் குறைந்தபட்சம் 41 ஆயிரம் பேராவது இறக்காமல் இருந்திருப்பார்கள், என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilnadu is safe even without Article 350 says Amit Shah in Rajya Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X