Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து கோளாறுக்கு உள்ளாகும் விமானங்கள்.. என்ன நடக்குது? டிஜிசிஏ தலைவர் தந்த பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் எழுந்த தொழில்நுட்ப கோளாறு தொடர்பான பிரச்சனை நாடு முழுவதும் விமான போக்குவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கோளாறுகள் காரணமாக அந்நிறுவனத்தின் விமானங்கள் திடீரென தரையிறக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறியது. பாகிஸ்தானில் கூட ஒரு விமானம் இதேபோல தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமீபத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகள் இயல்பானவை என்றும், இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லையென்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைவர் அருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டை சேர்ந்த விமானங்களும் இதுபோன்ற சிக்கல்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி ஊடகத்திற்கு இன்று அவர் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அருண்குமாரின் இந்த கருத்துக்கு முக்கிய காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் அடிப்படையாகும்.

தரையிறக்கம்

தரையிறக்கம்

கடந்த மே 4ம் தேதி சென்னை முதல் துர்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்துகொண்டிருந்த போது ஆயில் ஃபில்டர் பிரச்னைக் காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதேபோல் மே 28ம் தேதி மும்பை முதல் கோரக்பூர் சென்ற விமானம், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் இத்துடன் நிற்கவில்லை. இதேபோல் ஜூன் மாதத்தில் இரு முறையும், ஜூலை மாதத்தில் 3 முறையில் விமானம் பறந்தபோது தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

அதிலும் ஜூலை 5ம் தேதி ஒரே நாளில், டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 18 நாட்களில் 8 சம்பவங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் நிகழ்ந்துள்ளது. இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நஷ்டம்

நஷ்டம்

அந்த நோட்டீஸில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அடிக்கடி தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அதுமட்டுமின்றி விமான போக்குவரத்து ஆணையரகம் தரப்பில், மோசமான பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே விமானத்தில் கோளாறு ஏற்படுவதற்கு காரணமாக பார்க்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதையும் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் சார்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுவதாகவும் புதிய கட்டுப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை நாடு முழுவதும் விமான பயணிகளுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்துதான் தற்போது டிஜிசிஏ தலைவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார்.

தணிக்கை

தணிக்கை

கடந்த 16 நாட்களில் இதுபோன்று 15 தொழில்நுட்ப கோளாறுகள் இந்தியாவிற்கு வந்த அந்நிய நாட்டு விமானங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அருண்குமார் விளக்கமளித்துள்ளார். எனவே இந்த பாதிப்புகளை கண்டு பயணிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். பொதுவாக வெளிப்புற அடுக்கு விரிசல், குறைபாடுள்ள வால்வு, உயர் அழுத்த சுவிட்ச் இப்படியான சின்ன சின்ன பிரச்னைகள்தான் விமானங்களில் ஏற்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், இந்த குறைபாடுகளை தீர்க்க டிஜிசிஏ இரண்டு மாதக்கால தணிக்கையை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Recommended Video

    MIG-21 Fighter Pilots உயிர்களை பறிக்கிறதா ?
    தொழில்நுட்ப கோளாறுகள்

    தொழில்நுட்ப கோளாறுகள்

    மேலும் அவர் கூறியதாவது, "கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் போது முடக்கப்பட்ட இந்த விமான சேவைகள் தற்போது மீண்டும் மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சமீப நாட்களாக நாளொன்றுக்கு சுமார் 7,000 விமானங்கள் இந்திய பரப்பில் பயணங்களை மேற்கொள்கின்றன. இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இதுபோன்று சுமார் 150 தொழில்நுட்ப கோளாறு சார்ந்த பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஒரு விமானத்தில் சில நூற்றுக்கணக்கான சிக்கலான பாகங்கள் உள்ளன. இந்நிலையில் இதில் ஏற்படும் சில கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு நம்மை இட்டுச்செல்லாது எனவே இதைக்கண்டு பயப்படத் தேவையில்லை." என்று கூறினார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென சிலர் குறிப்பிடுகிறார்களே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, "நான் விமான நிறுவனங்களை மூடுவதற்கு திட்டமிடவில்லை. பயண பாதுகாப்புதான் என்னுடைய திட்டத்தின் அம்சம்" என்று விளக்கமளித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் உரையாற்றிய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "ஜூலை 1, 2021 முதல் ஜூன் 30, 2022 வரை என கடந்த ஓராண்டில் மட்டும் விமானம் சார்ந்து சுமார் 478 தொழில்நுட்ப கோளாறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+