பாஜகவுக்கு எதிரான புதிய முழக்கம் இதுதான்.. "பாரத்தையும்" விட்டு வைக்காத எதிர்க்கட்சிகள்! அதிரடி மூவ்
டெல்லி: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளனர். தங்களது இந்த கூட்டணிக்கு அவர்கள் 'இந்தியா' என்று பெயரிட்டுள்ளனர். Indian National Development Inclusive Alliance எனும் சுருக்கமே இந்த வார்த்தை. இந்நிலையில், இக்கூட்டணியின் புதிய முழக்கத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானதாகவும். பாஜகவை பொறுத்த அளவில், தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் மூன்றாவது முறையும் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிறது. ஏனெனில் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.
அதேபோல மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த 2 நாடாளுமன்ற தோல்வி கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்ய 2024 நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து வருகிறது.
இந்த பணியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்கான முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களின் முதலமைச்சர் உட்பட 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்றிருந்தன.
புதியதாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்தன. இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், பாஜகவுக்கு எதிரான இக்கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி இக்கூட்டணிக்கு 'இந்தியா' (INIDA - Indian National Development Inclusive Alliance) பெயரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த கூட்டணியின் பிரதான முழக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 'இந்தியா வெல்லும்' (ஜீதேக பாரத்) என்பதுதான் இந்த முழக்கம். இந்த முழக்கத்தை முன்வைத்துதான் இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் சந்திக்க இருக்கின்றன.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications