5 மாநில தேர்தல்:போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி.. பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டம்
டெல்லி: பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதே வேளையில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தும் போராட்டம் 8 மாதங்களை எட்டி விட்டது.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

5 மாநில தேர்தல்
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ' விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு பலர் ஆதரவாக உள்ளனர். இருப்பினும், சில விவசாயிகளுக்கு சட்ட விதிகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளது, அவர்களுடன் கேட்கவும் விவாதிக்கவும் இந்திய அரசு தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணி
இந்த நிலையில் ஜூலை மாதம் இரண்டு டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 2 டிராக்டர் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூலை மாதம் 9-ம் தேதி நடக்கும் டிராக்டர் பேரணியில் ஷாம்லி மற்றும் பக்பத் மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த பேரணி ஜூலை 10-ம் தேதி சிங்கு எல்லையை எட்டும்.

உறுதியாக இருக்கிறோம்
ஜூலை 24-ம் தேதி மற்றொரு டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பிஜ்னோர் மற்றும் மீரட் மக்கள் கலந்து கொள்வார்கள். ஜூலை 25-ம் தேதி இந்த பேரணி டெல்லி-காசிப்பூர் எல்லையை சென்றடையும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும். இதில் உறுதியாக இருக்கிறோம் என்று ராகேஷ் திகைத் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications