12வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்.. கொட்டும் பனி, கடும் குளிரிலும் டெல்லியில் குவிகிறார்கள்
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 12ம் நாளை எட்டியுள்ளது. கொட்டும் பனியிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடருகிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியும் கூடி போராடி வருகிறார்கள்.

விவசாயிகள் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்த நிலையில், டெல்லி போக்குவரத்து காவல்துறை சிங்கு, ஆச்சண்டி, பியாவோ மணியாரி மற்றும் மங்கேஷ் உள்ளிட்ட நான்கு எல்லைகளை மூடியுள்ளது. தொடர்ச்சியான ட்வீட்களில், போக்குவரத்து காவல்துறை இன்று இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை நீக்குவதே நிரந்தர தீர்வு.. டெல்லி சலோ விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது. குளிர் நிலலவுகிறது. இதையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.