டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திபெத் படை- களமிறக்கிய இந்தியா- வெலவெலத்து ஓடிய சீனா...சர்வதேச அரசியல் களத்திலும் பதிலடி வெயிட்டிங்

Google Oneindia Tamil News

டெல்லி: இமயமலை தொடங்கி மியான்மர் எல்லை வரை சீனா நினைத்த இடத்தில் எல்லாம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதாக பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கலாம்... இந்தியா இதற்கு பதிலடியாக திபெத் என்கிற மிகப் பெரிய ஆயுதத்தை களமிறக்க தயாராகிவிட்டதையே எல்லை நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

Recommended Video

    சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு உதவும் திபெத் படை

    1950களில் திபெத்தை சீனா ஆக்கிரமித்து தமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக்கியது. சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக திபெத்தியர்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

    ரஷ்ய மீட்டிங்.. இந்தியாவின் அதே ராஜதந்திரத்தை கையில் எடுத்த சீனா.. ஷூட்டிங் புகார்.. பின்னணி என்ன? ரஷ்ய மீட்டிங்.. இந்தியாவின் அதே ராஜதந்திரத்தை கையில் எடுத்த சீனா.. ஷூட்டிங் புகார்.. பின்னணி என்ன?

    இந்தியாவில் திபெத்தியர்கள்

    இந்தியாவில் திபெத்தியர்கள்

    திபெத்தியர்களின் தலைவரான தலாய்மாலாவுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. எந்த ஒருநாட்டிலும் கிடைக்காத சலுகைகள் அனைத்தையும் திபெத்தியர்கள் இந்தியாவில் முழுமையாக அனுபவித்து வருகின்றனர். எத்தனை சர்வதேச அரங்குகளில் பல்வேறு விவாதங்களை சீனாவுக்கு எதிராக எழுப்பிய இந்தியா திபெத் விவகாரத்தில் கொஞ்சம் மென்மைப் போக்கை காட்டி வந்தது.

    திபெத் படை வீரர்கள்

    திபெத் படை வீரர்கள்

    ஆனால் இந்த நிலைமை இனி நீடிக்காது என்பதுதான் இப்போதைய செய்தி. லடாக் பிராந்தியத்தில் சுமார் 7,000 திபெத்தியர்கள் வாழ்கின்றனர். இந்த திபெத்தியர்களைக் கொண்டு சிறப்பு எல்லைப் படை பிரிவு Special Frontier Force - உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 3,000க்கும் அதிகமானோர் திபெத்தியர்கள்தான். சீனாவுடனான மோதல்களில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பதும் இந்த திபெத்திய படை வீரர்கள்தான்.

    சீனாவின் பிடியில் இருந்து மீட்பு

    சீனாவின் பிடியில் இருந்து மீட்பு

    லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 20 பேரின் வீரமரணத்துக்கு காரணமான சீனாவுக்கு சரியான பதிலடி தரும் வகையில் ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா ஆக்கிரமித்திருந்த மலைப்பகுதிகளை இந்திய ராணுவம் கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்தியாவின் இந்த மகத்தான சாதனையின் பின்னணியில் இருந்ததும் இந்த திபெத் ராணுவ வீரர்கள்தான். இமயமலையின் மலைப்பகுதிகளை அசால்ட்டாக கடக்கக் கூடிய தீரம் கொண்ட திபெத் படை இந்தியாவுக்கு எல்லையில் கூடுதல் பலமாக இருக்கிறது.

    ராணுவ வீரரின் இறுதி நிகழ்வு

    ராணுவ வீரரின் இறுதி நிகழ்வு

    இந்த திபெத் படைவீரர் நைமா டென்சின், பாங்கோங் த்சோ ஏரியின் தென்பகுதியில் ரோந்து சென்ற போது கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தார். அவரது இறுதிநிகழ்ச்சிதான் சர்வதேச சமூகத்துக்கு புதிய செய்திகளை சொல்லி நிற்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திபெத் படைவீரர்கள், இந்தியாவை வாழ்த்த பாரத் மாதா கீ ஜே என முழக்கம் எழுப்பினர். இந்திய ராணுவத்துக்கு சல்யூட் செலுத்துவதாக முழக்கங்களை உரத்து முழங்கினர். நைமா டென்சினின் இறுதி நிகழ்ச்சியில் திபெத்திய தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

    சீனாவுக்கு கடும் நெருக்கடி

    சீனாவுக்கு கடும் நெருக்கடி

    நைமா டென்சின் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். நைமா டென்சின் வீரமரண நிகழ்வு என்பது சீனாவுக்கு சர்வதேச அரங்கில் ஒரு செய்தியை சொல்லி இருக்கிறது. இனி திபெத் ஆக்கிரமிப்பையும் சர்வதேச அரங்கில் சீனா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக திபெத் விவகாரத்தை கையில் எடுத்து சீனாவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியிருக்கும் இந்தியாவின் வியூகத்தை அரசியல் வல்லுநர்கள் சிலாகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Here is a story on Tibetan's Special Frontier Force and India- China border dispute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X