ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவுக்கு எதிராக அதிரடி மூவ்.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கை சட்டப்பேரவை முடிவுக்கு எதிரானது எனவும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா ஒன்றையும் தமிழக அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவில் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேந்தரின் அனுமதியில்லாமல் கவுரவ பட்டங்களை வழங்க முடியாது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

TN Govt Moves Supreme Court Against Governor s Decision to Refer University Bill to President

துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர். குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷரத்துக்கள் மசோதாவில் இருந்தன.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாவை ஜனாதிபதி முடிவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருப்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+