Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு ரயில் வந்துசேர ஒரு வருசமா.. இதுக்கு நடந்தே வந்து இருக்கலாம்! வாயை பிளக்க வைக்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்கள் ஓரிரு மணி நேரம் தாமதம் என்றால் ஓகே, சில மணி நேரம் என்றால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், ஆனால் ஓராண்டு தாமதம் என்றால் என்ன செய்ய முடியும். அப்படியொரு சம்பவம் தான் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

இந்தியாவில் மிக முக்கியமான பொது போக்குவரத்துகளில் ஒன்று இந்தியன் ரயில்வே. ஒவ்வொரு ஆண்டு கோடிக் கணக்கான மக்கள் ரயில்களிலேயே இந்திய ரயில்களில் பயணிக்கின்றனர்.

அந்தளவு ரயில் போக்குவரத்து நாட்டில் முக்கியமானதாகத் திகழ்கிறது. கொரோனா காலத்தில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டதைத் தவிர, சுதந்திரம் அடைந்தது முதல் ரயில் சேவை நாட்டில் தொடர்ந்து இயக்கப்பட்டது.

ரயில்வே

ரயில்வே

இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு ரயில்கள் மூலம் சென்றுவிடலாம். அதேபோல விலையும் குறைவு என்பதால் பலரும் ரயில்கள் மூலமே பயணிக்க விரும்புகின்றனர். பயணிகள் ரயிலைக் காட்டிலும் நாட்டில் சரக்கு ரயில்களுக்கு மவுசு மிக மிக அதிகம். குறைந்த செலவில் நாட்டில் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்பதால் சரக்கு ரயில் சேவை என்பது நாட்டில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

 தாமதம்

தாமதம்

என்ன தான் விலை குறைவு என்றாலும் கூட, ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. நாட்டில் பல பகுதிகளில் ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், சத்தீஸ்கர் - ஜார்கண்ட் இடையே இயங்கும் இந்த ரயிலின் தாமதத்தைக் கேட்டால் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

 ஓராண்டு தாமதம்

ஓராண்டு தாமதம்

ஓரிரு மணி நேரம் தாமதம் என்றால் ஓகே, சில மணி நேரம் என்றால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், ஆனால் ஓராண்டு என்றால் என்ன செய்ய முடியும். அப்படியொரு சம்பவம் தான் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் இருந்து உணவு தானியங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தனது பயணத்தைத் தொடங்கி கிட்டதட்ட ஒரு ஆண்டிற்குப் பின்னர், ஜார்கண்ட்டில் உள்ள புதிய கிரிதி ரயில் நிலையத்தைக் கடந்த மே 17இல் அடைந்தது.

 விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

இந்த ரயிலின் வருகை அட்டவணையில் இல்லை. திடீரென அரிசி மூட்டைகளில் உடன் இந்த ரயில் ஸ்டேஷனுக்குள் வந்ததால், அங்குள்ள அதிகாரிகள் குழம்பினர். பின்னர் விசாரித்த போது, ரயில் சுமார் ஓராண்டிற்குப் பின்னர் வந்து சேர்ந்துள்ளதைப் புரிந்து கொண்டனர். இது ரயில்வே அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

கடந்த ஆண்டு மே மாதம் சத்தீஸ்கரில் இந்திய உணவு கழகத்திற்குச் சொந்தமான அரிசி 1000 மூட்டைகளில் இந்த ரயிலில் ஏற்றப்பட்டது. இப்போது சுமார் ஓராண்டு தாமதத்திற்குப் பின்னர் இந்த ரயில் ஜார்க்ண்ட் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இடையே ரயிலில் எதோ பிரச்சினை ஏற்பட்டதால் ஒரு ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் இருப்பதால், இந்த பிரச்சினையில் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு இருக்க வேண்டும்.

 அரிசி மூட்டைகள் வீண்

அரிசி மூட்டைகள் வீண்

இருப்பினும், ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் இதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாகவே சுமார் ஓராண்டு தாமத்திற்குப் பின்னர், ரயில் சேரும் இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த ரயிலில் சுமார் 1000 மூட்டை அரிசி இருந்த நிலையில், அதில் 200 முதல் 300 மூட்டைகளில் இருந்த அரிசி ஏற்கனவே கெட்டுப் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

சத்தீஸ்கரில் அரிசி ஏற்றப்பட்ட இடத்திற்கும் ரயில் சென்று சேர்ந்த புதிய கிரிதி ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் 762 கி.மீ. ஆகும். இந்த தூரத்தை நடந்து சென்று இருந்தால் கூட இந்த ரயிலை விட சீக்கிரம் சென்று சேர்ந்து விடலாம் என்று நெட்டிசன்கள் நக்கலடிக்கின்றனர். மேலும், அதிகாரிகள் அலட்சியத்தால் சுமார் 300 மூட்டை அரிசி வீணாகி உள்ளதாகவும் சாடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+