Work From Ship.. உலகம் சுற்ற சொகுசு கப்பலில் ரூ.2.4 கோடிக்கு அறை..வாய்பிளக்க வைத்த அமெரிக்க இளைஞர்
டெல்லி: வொர்க் ப்ரம் ஹோம் போரடித்துவிட்டதாகவும், உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் சொகுசு கப்பலில் ரூ.2.4 கோடிக்கு அறை எடுத்து வேலை செய்து கொண்டே புதிய இடங்களை ரசிக்க திட்டமிட்டுள்ள நிலையில் கப்பலில் அவருக்கான வசதிகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா.. 2019ல் சீனாவில் துவங்கிய பாதிப்பு 2020 துவக்கத்தில் இந்தியா உள்பட பல நாடுகளில் பரவ துவங்கியது. இந்த பாதிப்பு தீவிரமானதால் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஐடி உள்பட பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய பணித்தது. 2020ல் துவங்கிய வொர்க் ப்ரம் ஹோம் இந்தியா உள்பட பல நாடுகளில் நடைமுறையில் இருந்தது.

போரடித்த வொர்க் ப்ரம் ஹோம்
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல நிறுவனங்களில் வொர்க் ப்ரம் ஹோம் வசதியை ரத்து செய்துவிட்டு பணியாளர்களை வேலையிடங்களுக்கு அழைத்துள்ளன. இருப்பினும் இன்று வரை சில நிறுவனங்களில் வொர்க் ப்ரம் ஹோம் ஆப்சனை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போதும் கூட ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோமை விரும்பாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் வேலை செய்து வரும் இளைஞர் வொர்க் ப்ரம் ஹோம் போரடித்ததால் கப்பலில் உலகை சுற்றியபடி வேலை செய்ய வேண்டும் என்பதற்காக புதிய முடிவை எடுத்துள்ளார். இதுதொடர்பான விபரம் வருமாறு:

28 வயது இளைஞர்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக மெட்டா உள்ளது. இந்த மெட்டாவின் ஒருபகுதியாக செயல்பட்டு வரும் ரியாலிட்டி லேப்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஆஸ்டின் வெல்ஸ். 28 வயது நிரம்பிய இவர் அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தை சேர்ந்தவர். வொர்க் ப்ரம் ஹோமில் பணியாற்றி வரும் இவர் புதியபுதிய இடங்களுக்கு பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக அவர் பஸ், விமானங்களை பயன்படுத்தி வந்தார். கூடவே தனது மடிக்கணினியை தூக்கி சென்று பயணங்களோடு தனது பணியையும் செய்து வருகிறார்.

ரூ.2.4 கோடிக்கு அறை
இந்நிலையில் தான் உலகின் பல இடங்களில் சுற்றிபார்க்க விரும்பினார். இதற்காக அவர் சொகுசு கப்பல் ஒன்றில் 12 ஆண்டுக்கு அறை ஒன்றை ரூ.2.4 கோடிக்கு லீசுக்கு எடுத்துள்ளார். MV Narrative என்ற மெகா க்ரூஸ் கப்பலில் அவர் அறையை லீசுக்கு எடுத்துள்ளார். இந்த கப்பலில் மொத்தம் 500 தனியறைகள், உள்பட சொகுசு வீடுகள் போன்ற வசதிகள் உள்ளன.

என்னென்ன வசதிகள்?
கப்பலில் அதிகப்படியான சொகுசு வசதிகள் என்றால் உலகத்தரத்தில் சுமார் 1970 சதுர அடியில் 4 பெட் ரூம், ஒரு டைனிங் ஏரியா, இரண்டு கழிப்பறை, பால்கனி வசதியுடன் கப்பலிலேயே சொகுசு வீடு போன்று இருக்கும். ஆனால் ஆஸ்டின் வெல்ஸ் ‛டிஸ்கவர்' என்ற வகையான அறையை லீசுக்கு எடுத்துள்ளார். இது 237 சதுரஅடி கொண்ட அறையாகும். போல்டிங் பெட், பேன்ட்ரி, குளியலறை, கழிவறை வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் அவருக்கு கோ வொர்க்கிங் ஸ்பேஸ், ஜிம், ஸ்பா உள்பட பல வசதிகள் உள்ளன.

ஆஸ்டின் வெல்ஸ் கூறுவது என்ன?
இதுபற்றி ஆஸ்டின் வெல்ஸ் கூறுகையில், ‛‛நான் அன்றாட வேலைகளை செய்து கொண்டே புதிய புதிய இடங்களுக்கு டிராவல் செய்ய ஆவலாக இருக்கிறேன். தற்போது உலகை சுற்றி பார்க்கவேண்டும் என்பதற்காக என் தினசரி வேலைகளை நான் செய்யாமல் நிறுத்த வேண்டிய சூழல் இல்லை. இதனால் வேலை செய்தபடியே அதிகப்படியான இடங்களை சுற்றிபார்க்க விரும்புகிறேன். மேலும் விமானம் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தால் உடைமைகளை எடுத்து செல்ல வேண்டியதுடன், நாம் செல்லும் இடங்களில் தங்க இடம்பார்க்க வேண்டும். ஆனால் சொகுசு கப்பலில் அறை எடுத்துள்ளதால் இந்த பிரச்சனை இருக்காது. மேலும் மருத்துவர்கள் முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்து வசதிகளும் அங்கேயே கிடைக்கும்'' என்றார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications