வெறும் 90 நாட்கள்தான் வேக்சின் தடுப்பாற்றல்.. டெல்டா கொரோனா நினைத்ததைவிட மோசம்..ஷாக்கிங் ரிப்போர்ட்
டெல்லி: உலகையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் வெறும் 90 நாட்களில் குறையத் தொடங்குவது பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகில் தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான மாபெரும் ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும் கொரோனா வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம் உலகில் தற்போது வேகமாகப் பரவி வரும் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதில் தடுப்பூசி பெரியளவில் பலன் தருவதில்லை என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பாற்றல்
இது குறித்த ஆய்வுகளும் உலக நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் உலக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா வேக்சின்களின் தடுப்பாற்றல் டெல்டா கொரோனாவுக்கு எதிராகக் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் இடையே டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படுவதில் பெரியளவில் வேறுபாடு இல்லை என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தான் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெரியளவில் மாற்றமில்லை
இந்த ஆய்வில் பல முக்கிய முடிவுகள் தெரிய வந்துள்ளது. அதாவது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்த பிறகு வேக்சின் போட்டுக் கொள்பவர்களுக்கு தடுப்பாற்றல் அதிகமாக உள்ளது. டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படும் போது வேக்சின் போட்டவர்களுக்கும் வேக்சின் போடாதவர்களுக்கும் இடையே VIRAL LOAD பெரியளவில் மாற்றமில்லை. அதேநேரம் ஆல்பா கொரோனா வகைக்கு எதிராக வேக்சின் சிறப்பான பலனைத் தருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நினைத்ததைவிட மோசம்
இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் சாரா வாக்கர் கூறுகையில், "தடுப்பூசி போடப்பட்டவர்கள் மத்தியில் டெல்டா கொரோனா எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல வேக்சின் போட்டவர்களின் உடல்களில் குறைந்த காலத்திற்கு மட்டும் அதிக வைரஸ் இருந்திருக்கலாம். இதன் மூலம் வைரஸ் எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் வேக்சின் போடாதவர்கள் டெல்டா கொரோனாவால் நாங்கள் நினைத்ததைவிட மோசமான ஆபத்தான நிலையில் உள்ளனர். எனவே, அனைவருக்கும் உடனடியாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.

வெறும் 90 நாட்கள் தான்
அதேபோல டெல்டா கொரோனாவுக்கு எதிராக பைசர் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா வேக்சின் தடுப்பாற்றல் வெறும் 90 நாட்களில் குறையத் தொடங்குவதும் இதில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக 35 வயதைக் கடந்தவர்களுக்கு மத்தியில் கொரோனா வேக்சின் தடுப்பாற்றல் குறைந்துள்ளது. பைசர், ஆஸ்ட்ரா ஜெனிகா மட்டுமின்றி மாடர்னா வேக்சின் தடுப்பாற்றலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறையத் தொடங்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கால இடைவெளி
மேலும், 2 டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி கொரோனா பாதிப்பு ஏற்படுவதில் பெரியளவில் மாற்றத்தை உருவாக்குவதில்லை. அதாவது ஒருவருக்கு 4 வார இடைவெளியில் வேக்சின் போட்டாலும், 12 வார இடைவெளியில் வேக்சின் போட்டாலும் அவரது உடலில் ஒரே அளவில் தான் ஆன்டிபாடி உருவாவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு டோஸ் வேக்சின் போட்டவர்களைக் காட்டிலும் 2 டோஸ் வேக்சின் போட்டவர்களுக்கு தடுப்பாற்றல் அதிகமாக உள்ளது. எனவே, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஒருவருக்கு 2 டோஸ் வேக்சின் போட வேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால் கொரோனா வேக்சின் டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியைக் குறைப்பதன் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்,

டெல்டா கொரோனா
டெல்டா கொரோனா பரவுவதை வேக்சின் தடுப்பாற்றல் குறைத்தாலும்கூட, தீவிர கொரோனா பாதிப்பையும் உயிரிழப்புகளையும் டெல்டா கொரோனா கணிசமாகவே குறைக்கிறது. எனவே பொதுமக்கள் விரைவில் கொரோனா வேக்சின் போட்டுக் கொள்வதே கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நிறுத்த ஒரே வழி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications