சம்பளம் + ஓய்வூதியம் அதிரடி உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. எந்த துறைக்கு தெரியுமா?
டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவன (PSGICs) ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நபார்டு வங்கி (NABARD) ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, ரிசர்வ் வங்கி (RBI) ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் அவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடுகிடுவென அதிகரிக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 8 வது சம்பள கமிஷனை எதிர்நோக்கி காத்துள்ளனர். இதற்கிடையே தான் மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று இன்ப செய்தியை வழங்கி உள்ளதுது.
அதாவது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் மற்றும் நபார்டு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு உள்ளிட்டவை மேற்கொள்ள நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கைக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காப்பீட்டு நிறுவன ஊழியர்கள்
‛‛6 பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஊதிய திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலமாக தேசிய காப்பீட்டு நிறுவனம் (NICL), நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (NIACL), ஓரியண்டல் இன்சூரன்ஸ் (OICL), யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (UIICL), ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (GIC), அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி (AICIL) ஆகிய ஆறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பயன்பெற உள்ளனர்.
அதன்படி இந்த சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்கள் 2022 ஆகஸ்ட் 1ம் தேதி என்று முன்தேதியிட்டு வழங்கப்படும். அதன்படி 2022 ஆகஸ்ட் 1 முதல் 14% அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன்மூலமாக சம்பளத்தில் 12.41 சதவீதம் வரை உயர்வு கிடைக்கும். இதன்மூலமாக 43,247 பேர் பயன்பெறுவார்கள்.
அதேபோல் 2010 ஏப்ரல் 1க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய பங்களிப்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாகவும் ஆகவும், குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் என்ற ஒரே சீரான விகிதத்திலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 14,615 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். நிலுவைத் தொகைகள், ஓய்வூதிய அலோவன்ஸ்கள் சேர்த்து 6 பொதுத்துறை காப்பீடடு நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.8,170 கோடி செலவினம் ஏற்படும்.
நபார்டு வங்கி ஊழியர்கள்
அதேபோல் நபார்டு வங்கி குரூப் ஏ, பி, சி பிரிவு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு மற்றும் படிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022 நவம்பர் 1 முதல் முன்தேதியிட்டு இது வழங்கப்படும். இதன்மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என்று சுமார் 3,800 பேர் பயன்பெற உள்ளனர்.
அதுமட்டுமின்றி நபார்டு வங்கியால் நேரடியாக நியமிக்கப்பட்டு 2017 நவம்பர்க்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் இனி ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு இணையாக கொண்டு வரப்படும்.
ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்கள்
அதேபோல் ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தில் 10% அதிகரிப்பிற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த உயர்வு 2022 நவம்பர் 1ம் தேதி முன்தேதியிட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதனால் மொத்தம் 30,769 பேர் பயனடைவார்கள். இதில் 22,580 ஓய்வூதியதாரர்களும், 8,189 குடும்ப ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இதற்காக ஆண்டுக்கு ரூ.2,696.82 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
மொத்தம் எவ்வளவு பேருக்கு பயன்
மொத்தமாக இந்த திருத்தத்தின் மூலமாக சுமார் 46,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 23,500 ஓய்வூதியதாரர்கள், 23,000 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications