டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24/7 முகாம்.. செப்டம்பருக்குள் 70 கோடி பேருக்கு வேக்சின் முதல் டோஸ்.. நிதியமைச்சகம் நம்பிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: செப்டம்பர் மாதத்திற்குள் குறைந்தது 70 கோடி பேருக்காவது கொரோனா வேக்சின் முதல் டோஸ் போட்டிருக்க வேண்டும் என்ற முடிவில் மத்திய அரசு உள்ளது. இதன் மூலம் ஹெர்ட் இம்மியூனிட்டி உருவாக்கி, பொருளாதார ரீதியான செயல்பாடுகளை தொடங்க முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் உள்ளது.

பயோலாஜிக்கல் இ வேக்சின் உட்பட மொத்தம் 74 கோடி வேக்சின் டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் செய்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 25 கோடி கோவிட்ஷீல்ட், 19 கோடி கோவாக்சின் மத்திய அரசு மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!

இதற்காக 30% முன்தொகை மத்திய அரசு மூலம் கொடுக்கப்பட்டது. இந்த 74 கோடி வேக்சின் டோஸ் வரும் டிசம்பர் 2021 வரை கிடைக்கும். நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று கூறிய நிலையில் இந்த ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

செய்தி குறிப்பு

செய்தி குறிப்பு

இந்த நிலையில் மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டுள்ளது, இன்றில் இருந்து இந்தியாவில் தினமும் 93 லட்சம் பேருக்காவது வேக்சின் போட வேண்டும். அப்போதுதான் செப்டம்பர் மாதத்திற்குள் 70 கோடி பேருக்கு குறைந்தது கொரோனா வேக்சின் முதல் டோஸாவது போட்டிருக்க முடியும். தினமும் 24/7 என்ற ரீதியில் வேக்சின் போட வேண்டும்.

எத்தனை

எத்தனை

முக்கியமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 24/7 வேக்சின் போட வேண்டும். வேக்சின் உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க டெலிவரியும் அதிகரிக்கும். தினமும் 1 கோடி டோஸ் போடுவதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. இந்த வேகத்தில் வேக்சின் போடுவதன் மூலம் 80% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, ஹெர்ட் இம்மியூனிட்டி உருவாகும்.

ஹெர்ட் இம்மியூனிட்டி

ஹெர்ட் இம்மியூனிட்டி

70 கோடி மக்களுக்கு இதற்காக வேக்சின் போட்டிருக்க வேண்டும். இதுவரை 19.2 கோடி பேருக்கு வேக்சின் ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது. 4.7 கோடி பேர் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர். செப்டம்பரில் 70 கோடி பேருக்கு ஒரு டோஸ் போடப்பட வேண்டும். மொத்தமாக இதற்காக மொத்தமாக 113 கோடி வேக்சின் தேவை.

சர்வதேச அளவு

சர்வதேச அளவு

சர்வதேச அளவில் வேகமாக வேக்சின் வாங்க வேண்டும். இந்தியாவில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 216 கோடி டோஸ் வேக்சின் உற்பத்தி செய்யப்படும். கொரோனா வராதவர்களுக்கு வேக்சின் கொடுப்பதில் முக்கியத்துவம் கொடுப்படும். பெரிய வேக்சின் கேம்ப்கள் மூலம் இப்படி வேக்சின் கொடுக்க முடியும்.

ஒரே நாள்

ஒரே நாள்

இதற்கு முன் ஒரே நாளில் 42.65 லட்சம் வேக்சின் போடப்பட்டது. இதுதான் இருப்பதிலேயே அதிகம். 8-9 மணி நேரத்தில் இந்த சாதனை செய்யப்பட்டது. இரண்டு ஷிப்ட் போட்டு 24 மணி நேரம் வேக்சின் வழங்கினால், இதைவிட இரண்டு மடங்கு வேக்சின் போட முடியும். ஹெர்ட் இம்மியூனிட்டி அடைவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க முடியும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

பொருளாதார ரீதியான பணிகளை வேகமாக தொடங்க முடியும். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் பீகார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் தனது வேக்சின் போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் தினசரி கேஸ்கள் அதிகமாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டிலும், இன்னும் சில வட கிழக்கு மாநிலங்களிலும் ஆக்டிவ் கேஸ்கள் பெரிய அளவில் குறையவில்லை, என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Union Finance Ministry wants to vaccinate 70 Cr people by September to achieve herd immunity and start the economic activity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X