டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷ்ரத்தா கொலை.. "குற்றவாளி தப்ப முடியாது, தக்க தண்டனை நிச்சயம்".. உள்துறை அமைச்சர் அமித்ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் லிவிங் டூகெதர் முறையில் வசித்து வந்த ஷ்ரத்தா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு உரிய தண்டனை விரைவில் கிடைப்பதை டெல்லி போலீஸ் உறுதி செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் லிவிங்க் டூகெதர் முறையில் வசித்து வந்த அப்தாப் அமீன், கடந்த மே மாதம் ஷர்த்தாவை கொடூரமாக கொலை செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.

ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய பிறகுதான், அப்தாப் அமீனே, ஷர்த்தாவை கொலை செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்தது அம்பலமானது.

துண்டு 35.. வேற வழியேயில்லை.. பிரதமர் மோடியே இங்கு மீண்டும் தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த துண்டு 35.. வேற வழியேயில்லை.. பிரதமர் மோடியே இங்கு மீண்டும் தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த

புதுப்புது தகவல்கள் வெளியாகி..

புதுப்புது தகவல்கள் வெளியாகி..

லிவிங் டூகெதர் முறையில் வசித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு ஷர்த்தாவை வலியுறுத்தியதாகாவும் இதை ஏற்க மறுத்ததாலேயே அப்தாப் அமீன், ஷரத்தாவை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்த.. நடத்த.. புதுப்புது தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில்..

35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில்..

குறிப்பாக ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு உடலை 35 துண்டுகளாக வெட்டி, அதை புதிதாக வாங்கிய பிரிட்ஜில் 3 வாரங்களுக்கு வைத்து உள்ளார். பிறகு அதை கொஞ்சம், கொஞ்சமாக குப்பை தொட்டி, வனப்பகுதிகளில் வீசியுள்ளார். கொலையை மறைப்பதற்காக அப்தாப் அமீன் செய்த காரியம் அனைத்தும் ஒரு கிரைம் திரில்லர் படங்களை மிஞ்சும் வகையில் அமைந்து வருகிறது.

வேண்டும் என்றே கொல்லவில்லை..

வேண்டும் என்றே கொல்லவில்லை..

தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு அப்தாப் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்த்தாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் உணர்ச்சி வேகத்தில் கொலை செய்து விட்டதாக நீதிமன்றத்தில் அப்தாப் அமீன் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அமித்ஷா உறுதி

அமித்ஷா உறுதி

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காக இந்த கொலை சம்பவம் மாறியிருக்கிறது. இந்த நிலையில், ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக கூறுகையில், "ஷர்த்தா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குறுகிய காலத்தில் கடுமையான தண்டனை கிடைப்பதை டெல்லி போலீஸ் உறுதி செய்யும்" என்றார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்..

குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்..

இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கில் முக்கிய தடயங்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அப்தாப் அமீனுக்கு எதிராக ஷ்ரத்தா அளித்த புகாரை மும்பை போலீசர் பகிர்ந்து இருக்கின்றனர். ஷரத்தா அளித்த புகாரில், அப்தாப் அமீன் கடுமையாக தாக்கியதாகவும் கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வீசிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் இந்த புகாருக்குப் பிறகு இரண்டு வருடங்கள் அப்தாப் அமீனுடன் ஒன்றாக ஷ்ரத்தா வசித்து வந்தது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

English summary
Union Home Minister Amit Shah said that the Delhi Police will ensure that the culprit involved in the murder of Shraddha who was living together in Delhi gets the appropriate punishment soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X