மலரட்டும் புத்தாண்டு! பிறக்கட்டும் தமிழ் மண்ணில் புத்தொளி! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
டெல்லி: புத்தாண்டில் தமிழ் மண்ணில் புத்தொளி பிறக்கட்டும் என்றும் தமிழக மக்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துப் பதிவு வருமாறு;
''அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2024-ம் ஆண்டு மலரும் இந்த இனிய நேரத்தில் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கட்டும். நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரத தேசம் முழுவதும் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வளர்ச்சி பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் இந்த ஆண்டில் மற்றுமொறு புதிய உச்சத்தை தொடரட்டும்.'''

''தமிழக மக்களுக்கு புதிய புத்தாண்டு வெற்றிகள் குவிக்கும் ஆண்டாக, மாநிலத்தில் தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் ஆண்டாக மலரட்டும். கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் என இறைவனை பிராத்தித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்கள் அனைத்தும், புதிய ஆண்டில் நாம் நம்பிக்கையுடன் பயணிக்க உதவட்டும்.''
''வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வேண்டுவோம். தமிழகத்தில் சூழ்ந்துள்ள இருள் நீங்கி புதிய ஒளி பிறக்கட்டும். வரவுள்ள 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடிகோலும். இதன் மூலம் தமிழக மக்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்.''
''2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடுமுழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று, மக்கள் போற்றும் பாசத்திற்குரிய தலைவர் நரேந்திர மோதி அவர்கள் மீண்டும் பாரத பிரதமராக பதவி ஏற்க ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் சூளுரை ஏற்போம். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ''
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications