மகள் பெயரில் மதுபான விடுதி.. காங்கிரஸ் குற்றச்சாட்டு.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால்!
டெல்லி: கோவாவில் மகள் பெயரில் சட்டவிரோதமாக மதுபான விடுதி நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவரின் மகள் ஜோயிஷ் இரானி. இவர் கோவாவில் நடத்தி வரும் விடுதியின் மதுபான உரிமையைப் புதுப்பிக்க, இறந்தவரின் ஆவணத்தை சமர்ப்பித்துப் பெறப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்

காங்கிரஸ் குற்றச்சாட்டு
இது தொடர்பாகக் கோவாவின் கலால் ஆணையர் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து கலால் துறையினரால் அனுப்பப்பட்ட நோட்டீஸின் நகலைப் பகிர்ந்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, கோவாவில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் ஒரே ஒரு மதுபான விடுதிக்குதான் உரிமம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட இந்த உணவகத்தில் மட்டும் இரு மதுபான விடுதிக்கு உரிமம் இருக்கிறது.

காங். வலியுறுத்தல்
இதனால் இந்த விவாகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இளைய தலைமுறையினர் நலனைக் காக்க, சட்டவிரோத பார் நடத்தும் ஸ்மிருதி இரானியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

விளக்கம்
இதுகுறித்து ஸ்மிருதி இரானி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. சம்மந்தப்பட்டவர் புகழ்பெற்ற அரசியல்வாதியின் மகள் என்பதால், பிரச்னையாக்கப்படுகிறது. கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் விடுதிக்கு ஜோயிஷ் இரானி உரிமையாளர் இல்லை. போலியான, அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில் பகிர்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானி பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக உண்மையை பேசியதால் என் மகள் குறிவைக்கப்படுகிறாள். 2014 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து நான் போட்டியிட்டது தான் என் செய்த தவறு. ஆனால் இன்னும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 2024ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் தோல்வியடைவது உறுதி. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications