“நீட் தேர்வு புனித தன்மையை இன்னும் இழந்துவிடவில்லை..” ராகுல் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி: பணமிருந்தால் நீட் தேர்வு முடிவுகளை யாராலும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று மக்களவையில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து ராகல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் . பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். அதில், "7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வினாத்தாள் கசிவு குறித்து தற்போது நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பாட்னாவில் இருக்கும் ஒரே ஒரு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணையும் நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறு.
இந்திய தேர்வு முறை இன்னும் தனது புனிதத்தை இழந்து விடவில்லை. சில மனித தவறுகளே குழப்பத்திற்கு காரணம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் போல் இப்போது எதுவும் நடைபெறவில்லை" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications