புது ரெக்கார்ட்! அமெரிக்காவில் படிக்க இந்தியர்கள் ஆர்வம்! அதிகரித்த விசா.. இந்த டேட்டாவை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உயர்கல்வியை தொடர்வதைவிடவும் மேலை நாடுகளில் உயர்கல்வியை தொடர்வதை மாணவர்களும் பெற்றோர்களும் அதிகம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இப்படியான உயர்கல்வி பயில்வதற்கு அமெரிக்காவை அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் முன்னெப்போதைவிடவும் நடப்பாண்டில் இந்திய மாணவர்கள் அதிகமானோர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பாண்டின் தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் உயர்கல்வி பயில இந்தியாவின் 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசா

விசா

இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. ஆனால் உள்நாட்டில் கல்வியை தொடர்வதைவிடவும் வெளி நாடுகளில் கல்வியை தொடர்வதையே அதிகமான மாணவர்கள் விரும்புவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு உயர்கல்விக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாகவும், அமெரிக்கா இந்திய மாணவர்களுக்கு தொடர்ந்து விசா அளித்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவு

முன்னெப்போதும் இல்லாத அளவு

இந்நிலையில் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிகமான இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் விசாக்களை வழங்கியுள்ளன. அதாவது நடப்பாண்டில் தற்போது வரை 82,000 மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசாக்களை வழங்கியுள்ளது. புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள துணைத் தூதரகங்கள் கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை மாணவர்களின் விசாக்களை அனுமதிப்பதில் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி உள்ளதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர்களின் பங்கு

இந்திய மாணவர்களின் பங்கு

இது குறித்து இந்தியாவின் மூத்த அமெரிக்க தூதர் பாட்ரிசியா லசினா கூறுகையில், "நடப்பாண்டு கோடை காலத்தில் நாங்கள் 82,000 மாணவர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளோம். இது முந்தைய ஆண்டை விட அதிகம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் உயர்கல்விக்காக அதிகம் விரும்பப்படும் நாடாக அமெரிக்கா உள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று கூறியுள்ளார். மேலும், இந்திய-அமெரிக்க உறவுகளை நீட்டிக்க செய்வதில் இந்திய மாணவர்கள் ஆற்றும் பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக மாணவர்கள்

அதிக மாணவர்கள்

2020-21 கல்வியாண்டில் இந்தியாவில் இருந்து 167,582 மாணவர்கள் அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக சென்றுள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேறெந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உயர் கல்வியை பயில மாணவர்கள் விரும்புவதை விட இந்திய மாணவர்கள்தான் அதிகம் விருப்பப்படுகிறார்கள் என, தூதரக விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசகரான டான் ஹெஃப்லின் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உயர்கல்வி பெறுபவர்களில் 20% இந்திய மாணவர்கள் ஆவார்கள். அமெரிக்காவில் படிப்பது குறித்து உதவி தேடும் மாணவர்கள் எஜுகேஷன் யுஎஸ்ஏ இந்தியா (EducationUSA India) செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலில் அமெரிக்காவில் உயர் கல்வியை படிப்பது குறித்து பெரிதும் உதவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+