இரு தவணை டோஸில் உ.பி. முதலிடம்.. ஒரு தவணை டோஸில் உத்தரகண்ட்.. இந்தியா சாதனை
டெல்லி: மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசியை அதிகம் போட்டு உத்தரகாண்ட் மாநிலம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 5.39 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டப்பட்டது. இரண்டாவது அலையில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கிறது.
இந்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் வரை 98.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் 99 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் 44.63 லட்சம் டோஸ்கள் போடப்பட்டதை அடுத்து 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டிவிட்டது. 275 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களும் அதிக அளவில் தடுப்பூசிகளை செலுத்தியவைகளில் முன்னணி இடம் வகிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் 12.21 கோடி டோஸ்களும் மகாராஷ்டிராவில் 9.32 கோடி டோஸ்களும் , மேற்கு வங்கத்தில் 6.85 கோடி டோஸ்களும் குஜராத்தில் 6.76 கோடி டோஸ்களும் பீகாரில் 6.35 கோடி டோஸ்களும் கர்நாடகாவில் 6.17 கோடியும், ராஜஸ்தானில் 6.10 கோடி டோஸ்களும், தமிழகத்தில் 5.39 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசியை அதிகம் போட்டு உத்தரகாண்ட் மாநிலம் சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29.17 கோடி பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டனர். அவர்கள் 41.22 சதவீதம் பேராவர்.
இந்த 100 கோடி டோஸ் சாதனையை இந்தியா கொண்டாடி வருகிறது. மிக நீளமான 1400 கிலோ எடையுள்ள கொண்டமூவர்ணக் கொடி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாடகர் கைலாஷ் கெர் இயற்றிய பாடலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா வெளியிடுகிறார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications