‘லவ் குரு’ ஆன ஏஐ.. சாட் ஜிபிடிக்கு வந்த நிலைமை.. காதல் கடிதம் எழுத சொல்லி டார்ச்சர் பண்ண போறாங்களாம்
காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் பலரும் தங்கள் ஜோடிகளுக்கு தங்கள் அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்த சாட் ஜிபிடியை நாட தயாராகி இருக்கிறார்களாம்.
டெல்லி: உலகம் முழுவதும் நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தின் போது காதலர்கள் தங்கள் ஜோடிகளுக்கு புதுப் புது கிப்ட்களை கொடுத்து அசத்த திட்டமிட்டு வருகின்றனர். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் புது வரவான சாட் ஜிபிடி பங்கு இல்லாமல் காதலர் தினம் கடந்து விடுமா என்ன? ஆம் காதலர்கள் பலரும் லவ் லெட்டர் எழுதவும் சாட் ஜிபிடியை நாட தயாராகி இருக்கிறார்களாம்.
காதலர்கள் ஆண்டு முழுவதும் உருகி உருகி காதலித்தாலும் அதை கொண்டாடுவதற்கான பிரத்யேகமாக ஒரு நாளும் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலிகளுக்கு கிப்ட் கொடுத்து அசத்த இளைஞர்கள் பலரும் ஒரு வாரமாக பல பல திட்டங்களுடன் வலம் வருகிறர்கள். சும்மாவே காதலர்கள் தங்கள் ஜோடிகளை அசத்த கேட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பார்கள் அதுவும் காதலர் தினம் வந்து விட்டால் சொல்லவா வேணும்.

காதலி மீதான அன்பை வர்ணிக்க
டைரி மில்க் சாக்கலேட் தொடங்கி விலை உயர்ந்த ஆபரணங்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப பரிசுகளை கொடுத்து காதலர்கள் பலரும் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் காதலர் தினம் குறித்த பதிவுகளும் நிரம்பி வழிகின்றன. பலரும் தங்கள் காதலிகளை வேலைண்டன்ஸ் டே கார்டு கொடுத்து வாழ்த்தவும், காதலி மீதான அன்பை வார்த்தைகளால் வர்ணிக்கவும் திட்டம் போட்டு ஒருவாரத்திற்கு முன்பிருந்தே பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி டைரியின் தாள்களை கிழித்து போடாத குறையாக மெனக்கெட்டு கொண்டு இருக்கிறார்கள்.

Chat GPT
ஒருபக்கம் இப்படி என்றால்,.. அட போங்க பாஸ்.. அதெல்லாம் 80, 90 கிட்ஸ்கள் காலம். இது எங்க 2 கே கிட்ஸ்கள் காலம் என்று சிம்பிளாக சொல்லிக்கொண்டு கவிதைகளையும் காதலியை வர்ணித்து எழுதவும் சாட் ஜிபிடியை நாட தயாராக உள்ளார்களாம். செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டான Chat GPT அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதும், நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் சாட் ஜிபிடி வழங்கி வருவது குறித்து நாம் அனைவரும் அறிந்ததுதான்.

''மாடர்ன் லவ்'' என்ற பெயரில்
இந்த சாட் ஜிபிடியைத்தான் காதலர்களும் தங்கள் ஜோடிகளை கவிதைகளால் வர்ணிப்பதற்கு பயன்படுத்த தயாராக இருக்கிறார்களாம். பிரபல ஆன்லைன் நிறுவனமான McAfee இது தொடர்பாக சர்வே நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த சர்வேயில்தான் இந்த சுவாரசிய தகவல் வந்துள்ளது. 9 நாடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை McAfee நடத்தியிருக்கிறது. ''மாடர்ன் லவ்'' என்ற பெயரில் நடத்தப்பட இந்த சர்வே முடிவுகளின் படி, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேருக்கு மனிதர்கள் எழுதிய காதல் கடிதத்திற்கும் இயந்திரம் எழுதிய கடிதத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது
அந்த அளவிற்கு துல்லியமாக சாட் ஜிபிடி எழுதிய காதல் கடிதங்கள் ஒத்துப்போகியிருந்தனவாம். இதில் சுவாரசியமிக்க இன்னொரு தகவல் என்னவென்றால், 10 சதவீதம் பேர் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காதல் கடிதங்களை தீட்ட போவதாகவும் தங்கள் பார்ட்னர்களால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். சாட் ஜிபிடி மூலமாக எழுதினால் தவறுகள் இன்றி எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும் எனவும் பெரும்பாலானோர் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த விரும்புவதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர்.

5 -ல் ஒரு பெண்கள் மட்டுமே
அதேவேளையில் இந்த சர்வேயில் கலந்து கொண்ட பெண்கள் பலரும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேலைண்டன்ஸ் டே கார்டுகளை எழுத போவதில்லை என்று கூறியிருக்கின்றனர். 5 -ல் ஒரு பெண்கள் மட்டுமே ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த விரும்புவதாக கூறியிருக்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆன்லைனில் பேக் ஐடிக்கள் உருவாக்கி வைத்திருக்கும் பலரும் ரொமாண்டிக் ஆக லெட்டர்கள் எழுத இந்த ஏஐ தொழில் நுட்பம் பெரிதும் உதவும் என்று McAfee எக்ஸ்பர்ட்ஸ் சொல்லியிருக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications