லோக்சபா தேர்தல்: மேற்கு வங்கத்தில் காங். மண்ணை கவ்வும்.. அப்ப யாருக்கு வெற்றிமுகம்?.. பரபர சர்வே

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மேற்கு வங்கத்தில் காங். மண்ணை கவ்வும்!.. பரபர சர்வே- வீடியோ

    டெல்லி: மேற்கு வங்கத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தம் 31 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ் நேஷன் சர்வே தெரிவித்துள்ளது.

    எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் கருத்து கணிப்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்சபா தேர்தல் குறித்து நியூஸ் நேஷன் மக்கள் கருத்தை கேட்டுள்ளது. அதன்படி வங்காளத்து புலி என்றும் தீதி என்றும் கூட்டணி கட்சியினரால் அழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் மாநிலமான மேற்கு வங்கத்தின் நிலவரத்தை பார்ப்போம்.

    பிரதமர் நரேந்திர மோடியை தைரியமாக எதிர்ப்பவர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர். அந்த வகையில் மோடியை ஊழலின் தலைவன் என்றும் நாட்டுக்கு அவமானம் என்றும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து வருகிறார்.

    நியூ நேஷன்

    நியூ நேஷன்

    அதுபோல் நரேந்திர மோடியோ சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளை மம்தா பாதுகாத்து வருகிறார் என விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நியூஸ் நேஷன் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மக்களின் நாடித் துடிப்பை அறிந்து கொண்டு அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    2 இடங்களில் வெற்றி

    2 இடங்களில் வெற்றி

    அதன்படி மொத்தம் 42 மக்களவை தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெறும். பாஜகவோ 7 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் இடது சாரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அது வாக்கு பகிர்தல் என்று பார்க்கும் போது திரிணமூல் காங்கிரஸ் 36 சதவீதம் வாக்குகளையும் பாஜக 23 சதவீதம் வாக்குகளையும் இடது சாரிகள் 26 சதவீதம் வாக்குகளையும் காங்கிரஸ் 7 சதவீதம் வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இரு தொகுதிகள்

    இரு தொகுதிகள்

    கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 34 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியோ 4 தொகுதிகளையும் பாஜக 2 தொகுதிகளையும் பெற்றது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக, 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    3-ஆவது மிகப் பெரிய மாநிலம்

    3-ஆவது மிகப் பெரிய மாநிலம்

    பொதுத் தேர்தல் என்று வரும் போது அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் 3-ஆவது இடம் பிடித்துள்ளால் முக்கிய மாநிலமாகும். உத்தரப்பிரதேசம் 80 தொகுதிகளுடன் முதலிடத்தையும், மகாராஷ்டிரம் 48 தொகுதிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+