டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய ராணுவத்திற்கு ஏகே 203 ரக துப்பாக்கிகள் வலுசேர்க்குமா?.. சிறப்பம்சங்கள் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா- ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகவுள்ள ஏகே 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவிற்கு வலுசேர்க்குமா என்பதை பார்ப்போம்.

Recommended Video

    AK 203 vs Indias INSAS Comparision! Features of AK 203 rifles | OneIndia Tamil

    இந்தியா- ரஷ்யா இடையேயான பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பின் போது 6 லட்சம் எண்ணிக்கையிலான ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. அதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் இந்தியா- ரஷ்யா கூட்டு தயாரிப்பில் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.

    இந்த துப்பாக்கிகளை இயக்குவது குறித்த செயல்விளக்கத்தையும் ரஷ்ய அதிகாரிகள் விளக்குவர். இந்திய ராணுவத்தால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இன்சாஸ் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.. ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை வழங்க முடிவுஇன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.. ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை வழங்க முடிவு

    அதிக எடை

    அதிக எடை

    இந்த துப்பாக்கிகள் அதிக எடை கொண்டதாக இருப்பதாகவும் தோட்டாக்கள் சிறிய அளவிலாக இருப்பதாக எதிரிகளை துல்லியமாக சுட முடியவில்லை என்றும் , அப்படியே தோட்டா பாய்ந்தாலும் எதிரிக்கு காயம் மட்டுமே ஏற்படுவதாகவும் இந்திய ராணுவம் கவலை தெரிவித்து வந்தது.

    கார்கில் போர்

    கார்கில் போர்

    இந்த துப்பாக்கிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வந்தது. கார்கில் போரின் போதும் இந்த ரக துப்பாக்கிகள்தான் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு போருக்கான தேவை இல்லாததால் இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. இவை 2017ஆம் ஆண்டுக்கு பிறது பழுதடைய தொடங்கிவிட்டன.

    உறைபனி காலம்

    உறைபனி காலம்

    உறைபனி காலங்களில் பனி கட்டியாகிவிடுவதால் எதிரிகளை வீழ்த்த இவற்றை பயன்படுத்த முடியாமல் ராணுவ வீரர்கள் தவித்தனர். இதனால்தான் இந்த துப்பாக்கிகளுக்கு மாற்றாக தீவிரவாத தாக்குதல்களை சமாளிப்பதற்காக ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்தியாவுக்கு 6.70 லட்சம் துப்பாக்கிகள் தேவைப்படுகிறது.

    6 லட்சம்

    6 லட்சம்

    இதில் 70 ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு மீதமுள்ள 6 லட்சம் துப்பாக்கிகளை அமேதியில் தயார் செய்து கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. ஏகே 203 ரக துப்பாக்கிகள் துல்லியமாகவும் எடை குறைவாகவும் அதே நேரத்தில் இலக்கை சரியாக தாக்கும் திறனும் கொண்டது.

    ஏகே 203 எடை

    ஏகே 203 எடை

    இன்சாஸ் துப்பாக்கியின் எடை 4.15 கிலோ இருக்கிறது. ஆனால் ஏகே 203 இன் எடை 3.8 கிலோவாகும். இன்சாஸ் துப்பாக்கியின் குறி வைக்கும் தொலைவு 400 மீட்டர் மட்டுமே. ஆனால் ஏகே 203 துப்பாக்கியானது 400 முதல் 800 மீட்டர் வரை குறி வைத்து தாக்க முடியும். இந்த துப்பாக்கியிலிருந்து 700 குண்டுகளை வெளியேற்றலாம். அத்தனையும் வாயு நிரப்பப்பட்டவையாகும்.

    நீளம் என்ன

    நீளம் என்ன

    இன்சாஸ் துப்பாக்கியின் நீளம் 960 மி.மீ. ஆகும். ஆனால் ஏகே 203 ரக துப்பாக்கியின் நீளம் 705 மி.மீ. ஆகும். இந்த துப்பாக்கியின் முழு தயாரிப்பு பணிகளை ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரீஸ் போர்டு மற்றும் ரஷ்யாவின் ரோசோபோரான்எக்ஸ்பர்ட் மற்றும் கலாஷ்னிகோவ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும். எனவே இந்த நவீன ரக துப்பாக்கிகள் இந்தியாவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

    English summary
    What are the features of AK 203 type rifles? Here are the comparison of India's INSAS and Russia's AK 203.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X