உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் ஓமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்னென்ன?.. முழு விவரம்!
டெல்லி: கொரோனா வைரஸ் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரசான ஓமிக்ரான் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் ஏற்கனவே புகுந்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அதன்பிறகு மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு,ம் கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களுக்கும் ஓமிக்ரான் வைரஸ் பரவி விட்டது.

ஓமிக்ரான் வைரஸ்
இந்தியாவில் தற்போது 250-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இப்படி ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் ஓமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதராண கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸின் அறிகுறிகள்தான் ஓமிக்ரான் வைரசிலும் காணப்படுவதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அறிகுறிகள் என்னென்ன?
தென் ஆப்பிரிக்காவில்தான் முதன் முதலில் ஓமிக்ரான் உருவான நிலையில் அங்கு ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களிடம் அடிக்கடி மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் இருந்ததாகவும்., குறிப்பாக குறைந்த முதுகுவலியுடன் தொண்டை அரிப்பு அல்லது தொண்டையில் புண் இருந்ததாகவும் தென் ஆப்பிரிக்கா தனியார் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவை அனைத்தும் டெல்டாவின் அறிகுறிகள் மற்றும் அசல் கொரோனா வைரஸின் அறிகுறிகளாகும்.

கணித்து விட முடியாது
ஆனாலும் ஓமிக்ரான் அறிகுறிகள் இதுதான் என்று கணித்து விட முடியாது எனவும் தடுப்பூசி நிலையைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும் என்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட நோயாளிகள் தலைவலி, சைனஸ் உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டிருந்ததாகவும், அதே சமயம் தடுப்பூசி போடப்படாத நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆபத்து குறைவானதா?
ஓமிக்ரான் வைரஸ் டெல்டா மற்றும் கொரோனா வைரஸ்களை விட ஆபத்து குறைவானது என்று கணிக்கும் ஆய்வாளர்கள் ஓமிக்ரான் கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து தொற்றுநோயின் முதல் அலையை விட 29% குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனாலும் இந்த நிலை தென் ஆப்பிரிக்காவில்தான் என்றும் ஓமிக்ரான் தாக்கம் அந்தந்த நாடுகளின் தட்ப, வெப்ப நிலை சூழ்நிலையை பொறுத்தும் மாறுபடலாம் எனவும் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications