அசுர வளர்ச்சி.. அசாதாரண சொத்து மதிப்பு! காரணம் பிரதமர் மோடியா? முதல்முறையாக மனம் திறந்த கவுதம் அதானி
டெல்லி: பாஜகவும் பிரதமர் மோடியும் ஆதரவாக இருப்பதால் தான், அம்பானி இந்தளவுக்கு வளர்ச்சியடைவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அவரே முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கவுதம் அதானி தனது தொழில்களைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஒருவராகவும் இந்தியாவில் டாப் கோடீஸ்வரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
இருப்பினும், பாஜகவுக்கு அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் இந்தளவுக்கு வளர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து கவுதம் அதானியே தனது பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார்.

அதானி
இது குறித்து பிரபல ஆங்கி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியுடனான நெருங்கிய உறவுகளால் பலனடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிலளித்துள்ளார்.. மேலும் சில எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் தான் பிஸ்னஸ் செய்து வருவதாகவும் இதன் மூலமே இந்த குற்றச்சாட்டுப் பொய்யானது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா முழுக்க மொத்தம் 22 மாநிலங்களில் தாங்கள் பிஸ்னஸ் செய்து வருவதாகவும் அதானி தெரிவித்தார்.

பிரதமர் மோடி காரணமா
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "பிரதமர் மோடியிடம் இருந்து யாராலும் எந்தவொரு தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். தேசிய நலனுக்கான கொள்கைகளைப் பற்றி நீங்கள் அவரிடம் பேசலாம், ஆனால் ஒரு கொள்கை வகுக்கும் போது, அது அதானி குழுமத்திற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம்... இன்று 22 மாநிலங்களில் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,..

எதிர்க்கட்சி மாநிலங்கள்
அதேநேரம் நீங்கள் மற்றொன்றை கவனிக்கலாம்.. இந்த 22 மாநிலங்களும் பாஜக ஆளும் மாநிலங்கள் இல்லை. எங்களுக்கு எந்த மாநில அரசுடனும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இடதுசாரிகள் ஆளும் கேரளாவிலும், மம்தாவின் மேற்கு வங்கத்திலும், நவீன் பட்நாயக்கின் ஒடிசாவிலும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆந்திராவிலும், கே.சி.ஆரின் தெலங்கானாவிலும் கூட நாங்கள் பிஸ்னஸ் செய்து வருகிறோம்" என்றார். நரேந்திர மோடி அரசு குறிப்பிட்ட முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதிலும், பாஜக அரசை அம்பானி- அதானி அரசு என்றும் காங்கிரஸ் விமர்சித்து வருகின்றனர்.

விளக்கம்
இந்தச் சூழலில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அம்பானி விளக்கமளித்துப் பேசியுள்ளார். முன்னதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதானி தனது தொழில் வாழ்க்கை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது தான், முதலில் பெரிய உத்வேகத்தைக் கண்டதாகத் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக மெல்ல மெல்லத் தனது நிறுவனம் வளர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்த அவர், தனது தொழில் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என்றும் கூறினார்.

யாரும் காரணமில்லை
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடியும் நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவது இயல்பு தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திட்டமிட்டு சிலர் இதுபோன்ற ஆதாரமற்ற விஷயங்களைப் பரப்புவது துரதிர்ஷ்டவசமானது.. எங்கள் குழுவின் வெற்றியைக் குறுகிய காலக் கண்ணோட்டத்தில் பாரத்து இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், எனது தொழில்முறை வெற்றியானது எந்தவொரு தனிப்பட்ட தலைவரும் காரணம் இல்லை.

ராஜீவ் காந்தி
மாறாக எனது வளர்ச்சியில் பல தலைவர்கள் மற்றும் அரசுகளின் கொள்கை, நிர்வாக சீர்திருத்தங்கள் தான் காரணம்.. 30 ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பின்னரே நாங்கள் இந்த நிலையை அடைந்துள்ளோம். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ஏற்றுமதி- இறக்குமதி கொள்கையை முதன்முதலில் தாராளமயமாக்கியனர். இது எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது என்பது இப்போது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்" என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications